என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்-நகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க.வினர் புகார்
    X

    ஊட்டியில் பாரபட்சமின்றி அனைத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்-நகராட்சி ஆணையாளரிடம் அ.தி.மு.க.வினர் புகார்

    • சாலை மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகளை அகற்றினர்.
    • பாரபட்சம் தொடரும் பட்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அனுமதியுடன் மாபெரும் போராட்டம் நடக்கும்.

    ஊட்டி,

    ஊட்டியில் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதைதொடர்ந்து நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் வருவாய்த்துறையினர் ஆலோசனை மேற்கொ ண்டனர்.நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் மீனாட்சி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் காபிஹவுஸ் பகுதி, மாரியம்மன் கோவில் முதல் பஸ் நிலையம் வரை சாலை மற்றும் நடை பாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 50 கடைகளை அகற்றினர்.

    இந்த நிலையில் நடைபா தைகளை ஆக்கிரமித்து இருந்ததாக கூறி அ.தி.மு.கவினர் நடத்தி வரக்கூ டிய கடைகளை மட்டுமே அகற்றியுள்ளதாக அ.தி.மு.கவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.இது தொடர்பாக அ.தி.மு .க மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு , பொதுகுழு உறுப்பினர் வழக்கறிஞர் தேவராஜ், அன்பு செல்வன் ஆகியோர் ஊட்டி நகரா ட்சி ஆணையாளர் காந்திராஜனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    பின்னர் பேசிய அ.தி.மு.க மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆக்கிர மிப்புகள் அகற்றபடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வி னரின் கடைகள் மட்டு மே அகற்றபடுகிறது. எ னவே பாராபட்சமின்றி அனைத்து கடைகளையும் அகற்று வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரா பட்சம் தொடரும் பட்சத்தில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அனுமதியுடன் மாபெரும் போராட்ட த்தை முன்னெடுக்கும் என்றார்.

    Next Story
    ×