என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்-அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு
- உலகத்திலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு யாருக்கும் கிடையாது
- பா.ஜ.க அரசு இந்தியை திணிப்பதில் யாரையும், எதையும், பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்கிறது.
குன்னூர்,
நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமையில் இந்தி திணிப்பு தீர்மான விளக்க பொ துக்கூட்டம் குன்னூர் வி.பி.தெருவில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திலேயே 50 ஆண்டு காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்த வரலாறு யாருக்கும் கிடையாது. ஆனால் ஒரு கட்சியில் 50 ஆண்டுகாலம் தலைவராக இருந்தவர் கலைஞர் மட்டுமே. அப்படிபட்ட மகத்தான ஜாம்பவானாக திகழ்ந்த கலைஞர் மிசாவில் இருந்து கட்சியை காப்பாற்றியதுடன், 13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.
இன்னொரு முறை தமிழ்நாட்டில் தி.மு.க போன்றதொரு ஒரு கட்சி உருவாக முடியாது. வரும் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் ஆளுமையில் தி.மு.க. மட்டுமே இருக்கும்.மற்ற கட்சிகள் தமிழ்நாட்டில் பெயரளவில் மட்டுமே செயல்படும். இத்தகைய வரலாற்று மிக்க தி.மு.க.வை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்சியின் கொள்கைகளை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
எனவே இளம் சமுதாயத்தினர் மத்தியில் தி.மு.க.வி zன் தியாக வரலாற்றை எடுத்து கூறி அவர்களுக்கும் அதனை கற்று கொடுக்க வேண்டும் .
யார் மத்தியில் ஆட்சி அமைத்தாலும் இந்தியை திணிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பா.ஜ.க அரசு இந்தியை திணிப்பதில் யாரையும், எதையும், பொருட்படுத்தாமல் அதன் போக்கில் செல்கிறது.இவர்களை வளரவிட்டால் பேராபத்து காத்து இருக்கிறது. இதில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, மாவ ட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, கே.எம்.ராஜூ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, அவைத்தலைவர் போஜன், மாநில சிறுபான்மை துணை அமைப்பாளர் அன்வர்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.