என் மலர்
நீலகிரி
- கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகரித்துள்ளது
- உயிலட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஊட்டி,
கோத்தகிரி பகுதியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை முக்கிய சுற்றுலா மையங்களாக உள்ளன. இவற்றை தவிர, உயிலட்டி நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில், பெய்த மழை காரணமாக கேத்தரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நீர்வீழ்ச்சிக்கு பகுதிக்கு சென்று குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
- 19 வகையான ‘பிளாஸ்டிக்’ பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரியின் சுற்றுச்சூ ழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பைகள், கப், டம்ளர், கரண்டி, முலாம் பூசப்பட்ட காகித தட்டு உள்ளிட்ட 19 வகையான 'பிளாஸ்டிக்' பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர, குடிநீர் பாட்டில், குளிர்பான பாட்டில்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமீறி பயன்படுத்து பவர்கள் அல்லது வெளியிடங்களில் இருந்து பயணிகளால் கொண்டு வரப்படும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கண்காணித்து பறிமுதல் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போது நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
கடந்த 4 நாட்களாக நகராட்சி பகுதிகளில் சுகாதார அலுவலர்கள், பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளில் செயல் அலுவலர்கள்,வருவாய் துறையினர் இணைந்து சோதனை மேற்கொ ண்டனர். அதில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்த னர். ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் 20 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது
- வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேண் ஒன்று வந்த போது போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பச்ைச தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.17.76-க்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா்.
ஊட்டி,
நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு டிசம்பா் மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17.76-க்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனா். இந்நிலையில், டிசம்பா் மாதம் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.17.76-க்கு விலை நிா்ணயம் செய்துள்ளது. டிசம்பா் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் ஏல விற்பனையின் அடிப்படையில் இந்த விலையை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில் வழங்க வேண்டும். தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு இதனை கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவே அதிக பட்ச விலை என கூறப்படுகிறது.
- சுயேச்சை கவுன்சிலர் கற்பகம் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 10- வது வார்டில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
அரவேனு,
கோத்தகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயகுமாரி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் உமாநாத், செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அடிப்படை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்படாததை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ராஜேஸ்வரி வடிவேல், தி.மு.க. கவுன்சிலர் வெஸ்லி மற்றும் சுயேச்சை கவுன்சிலர் கற்பகம் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது:-
ராஜேஸ்வரி வடிவேல் (10 -வது வார்டு அதிமுக கவுன்சிலர்):
மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சுமார் ஒரு வருட காலமாகியும் வார்டுகளுக்கு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதில்லை. இதனால் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு பதில் அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காணப்படுகிறது. எனவே அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கடந்த 1998-ம் ஆண்டு மன்றத் தீர்மானத்தின் படி 10- வது வார்டில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆனால் இதுநாள் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்த செயல் அலுவலர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது சம்பந்தமாக கோத்தகிரி தாசில்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்த பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பேரூராட்சி நிதி நிலையின் படி அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கற்பகம் ( 17 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர்):-
பேரூராட்சியில் நிதி நிலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள போதுமானதாக நிதி இல்லாவிடினும் புதர் செடிகளை வெட்டி அகற்றுவது, குடிநீர், தெருவிளக்கு, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளையாவது நிறைவேற்ற மன்றம் நிதி ஒதுக்க வேண்டும். இதுவரை வார்டில் எவ்வித வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை. எனவே வார்டுகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
வெஸ்லி (11 வது வார்டு திமுக. கவுன்சிலர்):-
ஆளும் கட்சியை நம்பி மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். எனவே அரசின் நற்பெயரை மக்களிடம் காப்பாற்ற வேண்டியது அவசியம். எனவே வார்டுகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதியை மன்றம் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து பேரூராட்சி மூலம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர், தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் உறுதி அளித்தனர். இதனால் சமாதானமடைந்த கவுன்சிலர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர். இதையடுத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர் விடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது.
- பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
கோத்தகிரி,
கோத்தகிரி மிஷன் காம்பவுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதால் அந்த பணிக்காக சாலைகளின் ஓரத்தில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் சாலைகளில் சிதறி கிடக்கின்றது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டி வரும் போது சிதறி கிடக்கும் பொருட்களின் மீது வாகனங்கள் ஏறி விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பணியினை எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கூறி கட்டுமான பொருட்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது.
- பெங்களூர், கொச்சி போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அரவேனு,
நீலகிரி மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. தேயிலைக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கள் பிரதான தொழிலாக இங்கு உள்ளது. அடிக்கடி மாறிவரும் கால நிலை மாற்றத்தால் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவு தண்ணீர் வசதி கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் உரம், பூச்சிக்கொல்லி, மருந்துகளின் விலை ஏற்றத்தாலும் தரமான காய்கறி விதை கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கேரட் பயிர் 2200 ஹெக்டரிலும், உருளைக்கிழங்கு 1200 ஹெக்டரிலும், கோஸ் 900 ஹெக்டரிலும், மற்ற மலைக்காய்கறி 2700 ஹெக்டரிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் 50 ஆயிரம் விவசாயிகள் மலைக் காய்கறிகள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரட் மற்றும் பீட்ரூட் விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெற்றே உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், திருச்சி, சென்னை மற்றும் நெல்லை உள்பட பல மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுதவிர பெங்களூர், கொச்சி போன்ற வேறு மாநிலங்களுக்கும் கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது கர்நாடகா மாநிலத்தில இருந்து கேரட், பீட்ரூட் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட், பீட்ரூட் விலை மிகவும் விலை குறைந்து விட்டது. கடந்த மாதம் வரை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் விற்ற கேரட், பீட்ரூட் தற்பொழுது 20 ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதனால் உற்பத்தி செலவு கூட கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
- 4 பிரிவில் தலா, 125 மெகாவாட், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணி நடந்து வருகிறது.
- 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில், 110 விதியின் கீழ், அ.தி.மு.க., அரசு குந்தா நீரேற்று மின்திட்ட பணியை அறிவித்தது
ஊட்டி,
மஞ்சூர் அருகே காட்டு குப்பை பகுதியில், '1,800 கோடி ரூபாயில், 4 பிரிவில் தலா, 125 மெகாவாட், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான பணி நடந்து வருகிறது.
முதல்கட்டமாக, 2,200 மீட்டருக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இப்பணிக்கான நவீன கட்டுமான பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடு, பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கட்டுமான பணியில் தனியார் பொறியாளர்கள், ஊழியர்கள் மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
நடப்பாண்டு பெய்த தொடர் மழையால், கட்டுமான பொருட்கள் எடுத்து வருவதிலும், ஊழியர்களை பணியில் ஈடுபடுவதிலும் காலதாமதம் ஏற்பட்டது.
முதல் பிரிவான, 125 மெகாவாட் திட்டபணியை, டிசம்பர் 2022 இறுதிக்குள் முடித்து மின் உற்பத்தியை தொடங்க மின்வாரியம் திட்டமிட்டது. ஆனால், அது சாத்தியப்படவில்லை.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், கொரோனா காலத்தில் ஏற்பட்ட தாமதம், கடந்த 2 ஆண்டுகளில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளால் குறிப்பிட்ட நாட்களில் கட்டுமான பணி முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நடப்பாண்டு முடிக்க வேண்டிய முதல் பிரிவுக்கான பணி, அடுத்தாண்டு முடிக்க திட்ட மிட்டுள்ளோம்,'என்றனர்.
கடந்த, 2013-ம் ஆண்டு பட்ஜெட்டில், 110 விதியின் கீழ், அ.தி.மு.க., அரசு குந்தா நீரேற்று மின்திட்ட பணியை அறிவித்தது. இந்த திட்டத்துக்கு டெண்டர் விட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைத்து, 2016-ம் ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.
2022-ம் ஆண்டில் முதல் பிரிவுக்கான பணி கூட இன்னும் நிறைவடையாத நிலையில், 9 ஆண்டை கடந்து இப்பணி நடந்து வருகிறது.
- ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், வெலிங்டன் கண்டோ ன்மென்டுக்குட்பட்ட வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் சோலடாமட்டம் கிராமத்தில் அவுட்ரிச் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கிராம மக்களுக்கான மருத்துவ முகாம், கைப்பந்து விளையாட்டு, உடல்நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய விரிவுரைகளை ராணுவ மருத்துவா்கள் மற்றும் விளையாட்டுத் துறையினா் எடுத்துரைத்தனா்.
மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்ட அக்னிபாத் திட்டம், அக்னிவீரா் சோ்க்கை மற்றும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்சியில், தூய்மையின் முக்கியத்துவத்தை ராணுவ வீரா்கள் விளக்கினா். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாசதிஷ்குமார், இளைஞா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலாடாமட்டம் பகுதியில் ராணுவத்தின் மூலம் மருத்துவ முகாம் முதியோருக்கு நலத்திட்டம், ஆண்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி ராணுவத்தில் சேர்வதற்கான அறிவுரைகளை அளித்த ராணுவ அதிகாரிகளுக்கு ஊராட்சி சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுளா சதிஷ்குமார் தெரிவித்தார்.
- படுகர் சமுதாயத்தினரின் விழாவான ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ளது.
- கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடக்கும் படுகர் சமுதாயத்தினரின் விழாவான ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ளது.
விழாவிற்க்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஒ பூஷணகுமார், படுகர் சமுதாய ஊர் பெரியவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு வாரம் நடக்கும் விழாவின் போது போக்குவரத்து ஏற்பாடுகள் எந்தெந்த வகையில் இருக்க வேண்டும் என்பதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
அரவேணு,
கோத்தகிரி அருகே தவிட்டு மேடு பெரியார் நகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்துள்ளது. தொடர் கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இங்கு சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.
- வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்திற்கு புத்தாண்டு கொண்டா–ட்டத்திற்காக தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர்.
வெளிப்பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.
அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று மதியம் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் காரின் பின் பகுதியில் வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்பு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(வயது24) என்பதும் காரில் அவருடன் வந்த 4 பேர் ஸ்ரீதரின் நண்பர்கள் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோத்தகிரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






