என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    நீலகிரியில் ஹெத்தையம்மன் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம்

    • படுகர் சமுதாயத்தினரின் விழாவான ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ளது.
    • கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நடக்கும் படுகர் சமுதாயத்தினரின் விழாவான ஹெத்தையம்மன் திருவிழா ஜனவரி 2-ந் தேதி தொடங்க உள்ளது.

    விழாவிற்க்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆர்.டி.ஒ பூஷணகுமார், படுகர் சமுதாய ஊர் பெரியவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு வாரம் நடக்கும் விழாவின் போது போக்குவரத்து ஏற்பாடுகள் எந்தெந்த வகையில் இருக்க வேண்டும் என்பதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×