என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மது பாட்டில்கள் எடுத்து வந்த 5 பேர் கைது
  X

  மது பாட்டில்கள் எடுத்து வந்த 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.
  • வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்

  கோத்தகிரி,

  நீலகிரி மாவட்டத்திற்கு புத்தாண்டு கொண்டா–ட்டத்திற்காக தற்போது வெளி மாவட்டம் மற்றும் வெளி–மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர்.

  வெளிப்பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் கோத்தகிரி சாலை வழியாகவே ஊட்டிக்கு செல்கின்றனர்.

  அவ்வாறு வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

  நேற்று மதியம் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

  சோதனையில் காரின் பின் பகுதியில் வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

  பின்பு காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தபோது அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்(வயது24) என்பதும் காரில் அவருடன் வந்த 4 பேர் ஸ்ரீதரின் நண்பர்கள் என்றும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோத்தகிரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×