என் மலர்
நீலகிரி
- நேற்று காலை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.
- நீலகிரி அணிக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
அரவேணு,
கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆர்யா கவுண்டர் நினைவுக் கோப்பைகான மூத்தோர் கால்பந்து போட்டிகள் தொடங்கியது.இதில் கேரளா, கண்ணனூர், சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி, மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கு பெற்று விளையாடியது. நேற்று முன்தினம் கால் இறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் நேற்று காலை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது. முதல் அரை இறுதிப்போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகள் விளையாடிது. இதில் கேரளா அணி 3 கோல் போட்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து நடந்த 2-வது அரை இறுதிப் போட்டியில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகள் விளையாடியது. இதில் நீலகிரி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இதை அடுத்து கேரளா மற்றும் நீலகிரி அணிகள் இடையே மாலை 4 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பாக விளையாடிய கேரளா அணி ஒரு கோல் மட்டும் போட்டு வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற கேரளா அணி மற்றும் 2ம் இடம் பிடித்த நீலகிரி அணிக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன.
- காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
- யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.
அரவேணு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய குடியிருப்புக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளது.குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், முள்ளூர், கோழிக்கரை ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளது.
இந்நிலையில் கோழிக்கரை பழங்குடியின கிராமம் வழியாக செல்லும் சாலையை மேல்கூப்பு, கீழ்கூப்பு, செம்மநாரை, வாகப்பனை, அட்டடி, கோழித்தொரை உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில தினங்களாக இந்தசாலையை ஓட்டிய தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகா மிட்டுள்ளன. அவ்வப்போது குடியிருப்பையொட்டிய பகுதிகளுக்குள்ளும் வந்து செல்கிறது.
இதனால் இந்த கிராம மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சப்படுகிறார்கள்.
எனவே வனத்துறையினர் தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்க்கொண்டு காட்டு யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பரிகார தெய்வங்கள், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து தோரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட–த்தை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தைப்பூச திருவிழாவிற்கு வருகை தந்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரை நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலை வர் மோகன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தைப்பூசத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் தேரோட்டத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதி–களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேர் திருவிழா நடக்கும். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை முதலே கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக முருகனை தரிசிக்க சக்திமலை முருகன் கோவிலுக்கு வந்த னர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
அதனை தொடர்ந்து தைப்பூச தேர்திருவிழா காமாட்சி தாசர் சுவாமிகள் அவினாசி ஆதினம் முன்னிலையில் நடை– பெற்றது.இவ்விழாவில் கோவில் குருக்கள் பட்டி விநாயகம்,முருகேஷ், ஸ்ரீ சக்தி சேவா சங்கம் தலைவர் போஜராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் கொடி இறக்குதல், மஹா தீபாராதனை, மவுன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.
அரவேணு காமராஜர் நகர் பாலமுருகன் கோவிலிலும் 108-க்கும் மேற்பட்ட பால் குடங்களும், காவடிகளும் எடுக்கப்பட்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.
- நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும்
கோத்தகிரி,
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் உள்ள 5-வது வார்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி உபயோகித்து வரும் நடை பாதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேதமடைந்தது. இதனை பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் சேதமடைந்த இந்த நடைபாதையின் குழியில் விழுந்து ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
- தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
அரவேணு,
கோத்தகிரி காந்தி மைதானத்தில் ராவ்பகதூர் ஆரிகவுடர் நினைவுக் கோப்பைக்கான மாநில அளவிலான மூத்தோர் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா, சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், வியாசர்பாடி மற்றும் நீலகிரி ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடியது.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் கேரள அணி சென்னை அணியை 5-0 என்ற கோல்கள் கணக்கிலும், திண்டுக்கல் அணி, கோவை அணியை 1-0 என்கிற கோல்கள் கணக்கிலும், நீலகிரி அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் சென்னை வியாசர்பாடி அணியையும், திருப்பூர் அணி 1-0 என்கிற கோல்கள் கணக்கில் புதுக்கோட்டை அணியையும் வென்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
நாளை காலை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் கேரளா மற்றும் திண்டுக்கல் அணிகளும், 2வது அரையிறுதிப் போட்டி யில் நீலகிரி மற்றும் திருப்பூர் அணிகளும் விளையாடுகின்றன. இதில் வெற்றிபெறும் அணிகளுக்கிடையேயான இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நாளை மாலை நடைபெறுகிறது.
இந்த போட்டிகளை தேசிய கால்பந்து நடுவர் பால கிருஷ்ணன் தலைமையில் தேசிய மூத்தோர் கால்பந்து ஒருங்கிணைப்பாளர்கள் பெண்டா நாகராஜ், நஞ்சன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா 6-ந் தேதி நடக்கிறது.
- சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், டாப்செட்கோ-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், டாம்கோ(தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்) மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா நாளை 6-ந் தேதி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குறுமிளகு செடிகளை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்
- கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான சோலூர் மட்டம், கடசோ லை, குஞ்சப்பனை, செமனாரை, கோழிக்கரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு, கரிக்கையூர், குள்ளங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு தங்கம் எனப்படும் குறுமிளகு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த குறுமிளகு செடிகளை அங்கு சைபர் மரம், பலாமரம் போன்ற மரங்களில் கொடிகளாக ஏற்றிவிட்டு இதனை வளர்த்து வருவார்கள். மேலும் தேயிலை செடிகளின் இடையே ஊடுபயிராகவும் குறுமிளகு பயிரிட்டுள்ளனர்.
இதனை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கி செல்கிறார்கள்.
- தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
- 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதி திராவி–டர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கிகடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்களை பெற்றுக் கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி–திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (கிளினிக்),
மகளிர் சுய உதவிக்கு–ழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கான ொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இருபா லருக்கும்), துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுது வோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவுன செயலருக்கு நிதியுதவி என ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் 7. 5.2021 முதல் 31.12.2022 வரை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.79.96 லட்சம் மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (கிளினிக்) 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், மகளிர் உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டத்தின் கீழ் 8 பய–னாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டங்க ளின் மூலம் பயன்பெற விரும்பு–வோர்கள் குடும்ப அட்டை, சாதிசான்று, வருமான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், கொட்டேஷன் (ஜி.எஸ்.டி.எண்) உடன் திட்ட அறிக்கை ஆகியவற்றி னையும், வாகன கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும்
பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து http:application.tahdco.com என்றஇணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி தர்மராஜ் தெரிவித்ததாவது:
நான் ஊட்டி டேவிஸ்டேல் பகுதியில் வசித்து வருகி–றேன். நான் விவசாயம் தொழில் செய்து வருகி–றேன். நான் தனி நபர் ஒருவரிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் சொந்தமாக ஒரு லோடு வாகனம் வாங்க முடிவு செய்தேன்.
இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தாட்கேர் மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வாகன கடனுக்காக விண்ணப்பிக்க லாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து, சொந்த முதலீடாக ரூ.10,248 செலுத்தினேன். இதனுடன் வங்கிகடன் ரூ.6.19 லட்சம், தாட்கோ மானியம் ரூ.2.25 லட்சம் என மொத்தம் ரூ.8.54 லட்சம் மதிப்பில் லோடு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை கொண்டு எனது தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை எடுத்து செல்லவும், வெளி வாடகைக்கு செல்வதால் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மிகவும் பயனுள்ள தாக இருக்கும். இதுபோன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வரும்
முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி–யின் போது தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குன்னூர்,
குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்ததும், பிரசித்தி பெற்றதுமான தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கி றது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம். இதனை குன்னூரில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உபயமேற்று நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பக்தர்க ளின் பங்களிப்புடன் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்ேபாது, இந்த பணிகள் முடி வடைந்ததை தொடர்ந்து, கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்ய ப்பட்டது.
அதன்படி நேற்று மகா கணபதி பூஜை மற்றும் சிறப்பு ஹோ மங்களுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து கன்னி மாரியம்மன் கோவிலில் இருந்து முளை ப்பாலிகை, தீர்த்த குடம் ஆகியவை மேள-தாளம் முழங்க ஊர்வலமாக யாக சாலைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் முதல் கால யாக பூஜை நடை பெற்றது.
பின்னர் வி.பி.தெரு சந்தான வேணு கோபால் சுவாமி கோவிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு யாக சாலையை அடைந்தது. தொடர்ந்து 2-ம் கால யாக பூஜை நடந்தது.
அதன்பின்னர் 3-ம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், கோபுர கலசம் வைத்தல், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடை
பெற்றது. கும்பாபிஷேக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபி–ஷேகம், இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.இதையொட்டி காலை 6 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைதொடர்ந்து காலை 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் யாத்ரா தான சங்கல்பம் நடக்கிறது. பின்னர் விமானம், கொடிமரம், தந்தி மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவில் குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா காரணமாக குன்னூர் நகரமே விழாக்கோ லம் பூண்டுள்ளது.
- சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்தது.
- மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி காந்திமைதானம் பகுதியில் இருந்து காமராஜர் சதுக்கம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான மூடப்படாமல் இருந்த குழியால் விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாக கடந்த வாரம் மாலைமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் வாயிலாக சம்மந்தபட்ட அதிகாரிகள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அந்த குழியினை இரும்பு கம்பிகள் மூலம் அடைத்தனர். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் பாதசாரிகள் மாலைமலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில் குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறைக்குள் புகுந்த கரடி அங்கிருந்த எண்ணை, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு சென்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் இல்லையெனில் கூண்டுவைத்துப் பிடிக்கவும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
- முக்கியமான கடைவீதி பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
- மார்க்கெட் சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலையானது ஒரு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை அரசு பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் செல்லக்கூடிய சாலையாகும். அது மட்டும் இன்றி கோத்தகிரி முக்கியமான கடைவீதி பகுதி என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். காலை மற்றும் மாலையில் பள்ளி குழந்தைகள் ஏராளமானார் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்பொழுதும் இச்சாலை மிகவும் நெரிசலாகவும், பரபரப்பாகவும், மக்கள் அதிகம் நடமாடக்கூடிய சாலையாக இருக்கிறது. இருந்தபோதிலும் இச்சாலையை 2 வழிச்சாலையாக பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலாகவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் செய்து வருகின்றனர். அது மட்டும் இன்றி மார்க்கெட் சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது. இருந்தபோதிலும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இது வியாபாரத்திற்கும், பொதுமக்கள் நடப்பதற்கும் வெகு சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதை ஒரு வழிச்சாலையாக மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






