search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் குறுமிளகு விளைச்சல் அதிகரிப்பு
    X

    கோத்தகிரியில் குறுமிளகு விளைச்சல் அதிகரிப்பு

    • குறுமிளகு செடிகளை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர்
    • கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளான சோலூர் மட்டம், கடசோ லை, குஞ்சப்பனை, செமனாரை, கோழிக்கரை, மேல்கூப்பு, கீழ்கூப்பு, கரிக்கையூர், குள்ளங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு தங்கம் எனப்படும் குறுமிளகு அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. கோத்தகிரி பகுதிகளில் தற்போது குறுமிளகு விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த குறுமிளகு செடிகளை அங்கு சைபர் மரம், பலாமரம் போன்ற மரங்களில் கொடிகளாக ஏற்றிவிட்டு இதனை வளர்த்து வருவார்கள். மேலும் தேயிலை செடிகளின் இடையே ஊடுபயிராகவும் குறுமிளகு பயிரிட்டுள்ளனர்.

    இதனை வாங்குவதற்காக பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்த வண்ணம் உள்ளனர். வியாபாரிகள் நேரடியாக வந்தும் வாங்கி செல்கிறார்கள்.

    Next Story
    ×