என் மலர்
நீங்கள் தேடியது "A bear entered"
- குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது
- கரடி தோட்டக்கலை அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தது.
குன்னூர்,
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரடிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. குன்னூர் சிம்ஸ் பூங்கா நர்சரி அருகே தோட்டக்கலைத்துறை அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் அருகே வனப்பகுதியும் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று, நேற்று முன்தினம் இரவு தோட்டக்கலை அலுவலக கதவை உடைத்து உள்ளே புகுந்தது. அலுவலக முன்புறம் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்த எண்ணெய்யை குடித்தது. அங்கிருந்த கணினியை சேதப்படுத்தியது.
பின்னர் மாடி படியில் ஏறி சென்ற கரடி, அங்கு பணியாளர்கள் வைத்திருந்த சர்க்கரை, தேயிலைத்தூள் போன்றவற்றை தின்றும், கொட்டியும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து கரடி வனப்பகுதிக்குள் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, கூண்டு வைத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
- தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
- கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் அண்மைக் காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கரடிகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்நிலையில் குன்னூா் அருகே உலிக்கல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் அறைக்குள் புகுந்த கரடி அங்கிருந்த எண்ணை, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை உட்கொண்டு சென்றது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த கரடியை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் இல்லையெனில் கூண்டுவைத்துப் பிடிக்கவும் வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.






