நீலகிரியில் ஒருங்கிணைந்த லோன் மேளா

கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா 6-ந் தேதி நடக்கிறது. சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.
நீலகிரியில் ஒருங்கிணைந்த  லோன் மேளா
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், டாப்செட்கோ-தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம், டாம்கோ(தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்) மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள் குறித்த ஒருங்கிணைந்த லோன் மேளா நாளை 6-ந் தேதி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின இனத்தை சேர்ந்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கடன் உதவிகளை பெற்று பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com