என் மலர்
கிருஷ்ணகிரி
- தினசரி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
- உள்நோயாளிகளுக்கு 5 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உரிகம் உள்ளிட்ட பகுதிகள் மலைகள் மற்றும் வனப்பகுதிகளால் சூழ்ந்துள்ளன.
இப்பகுதி மக்களுக்கு தாங்கள் வசிக்கும் இடத்தில் மருத்துவ வசதி கிடைக்காததால், நீண்ட தூரம் பயணம் செய்யும் அவலம் இருந்து வருகிறது.
அஞ்செட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள உரிகம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இக்கிராமத்தை சுற்றிலும் கோட்டையூர், வீரனப்பள்ளி, ஜீவநத்தம், பிலிக்கல், நூருந்துசாமி மலை, உடுபராணி உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் அவசர சிகிச்சைக்கு உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், 50 கிமீ தொலைவில் உள்ள தேன்கனிக்கோட்டைக்குச் செல்லும் நிலையுள்ளது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில் உரிகம் கிராமத்தைச் சுற்றிலும் 35 மலைக் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்பெறும் உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். போதிய செவிலியர்களும் இல்லை. உள்நோயாளிகளுக்கு 5 படுக்கை வசதி மட்டுமே உள்ளது.
மேலும், கழிப்பறை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க 3 இன்குபேட்டர்கள் உள்ளன. இதில் 2 பழுதாகி உள்ளன. மேலும், இதற்காக யுபிஎஸ் வசதியுள்ளது. ஆனால், அது சிறிது நேரம் மட்டும் இயங்கும் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு சுற்றுச் சுவர் வசதியில்லை.
மலைக் கிராம மக்களின் நலன் கருதி சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விஷக்கடி சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என கூறினர்.
இது தொடர்பாக சுகாதார நிலைய ஊழியர்கள் கூறுகையில் இங்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களை மகப்பேறுக்கு தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்புகிறோம். இங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மீண்டும் மின்சாரம் வர 2 நாள் வரை ஆகிறது.
சுற்றுச்சுவர் இல்லாததால், அடிக்கடி இரவு நேரங்களில் வனவிலங்குகள் சுகாதார நிலைய வளாகத்தில் சுற்றுவதால், இரவு பணியில் அச்சத்துடன் இருக்கும் நிலையுள்ளது.
போதிய மருத்துவர், செவிலியர் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால், தேன்கனிக்கோட்டை, ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறினர்.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- யானைகள் கிராமங்களுக்குச் செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
- வனப்பகுதி சாலையில் 35 கி.மீ தூரம் இரும்பு கம்பிவட தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் யானைகள் தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவது வழக்கம். இவ்வாறு வரும் யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதி வரை செல்வதோடு, 6 மாதங்கள் வரை இப்பகுதியில் சுற்றித் திரியும்.
கடந்தாண்டு, இடம்பெயர்ந்து வந்த 200 யானைகளில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 20 யானைகள், உரிகம் வனப்பகுதியில் 40 யானைகள் உள்ளிட்ட 100 யானைகள் நிரந்தரமாகத் தமிழக வனப்பகுதியில் தங்கிவிட்டன.
கடந்த காலங்களில் வரும் யானைகள் இடம்பெயர்ந்து வனக்கிராமங்களில் புகுந்து விளை நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தின. மேலும், ஊருக்குள் நுழையும்போது, யானைகள், மனித மோதல் நிகழ்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டன.
தற்போது, கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து யானைகள் இடம்பெயர்ந்து பயணத்தைத் தொடங்கி யுள்ளன.
கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து உரிகம் அருகே தெப்பகுழி, உகினியம் ஆகிய பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஆழம் குறைந்த பகுதிகள் வழியாக கடந்த 1-ந்தேதியில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் இடம்பெயர்ந்து வந்தன.
இதையடுத்து, கடந்த காலங்களைப்போல யானைகள் கூட்டம் விளை நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்வதைத் தடுக்க வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகை யில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்காவிலிருந்து யானைகள் இடம்பெயர்ந்து தொடங்கியுள்ள நிலையில், வனத்தை விட்டு யானைகள் கூட்டம் வெளியேறாமல் இருக்க வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
மேலும், தீவனப்புல் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் யானைகள் வனப்பகுதி யிலிருந்து கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்ட சூரிய சக்தி வேலி மற்றும் யானை தாண்டா பள்ளம் மனிதர்களால் சேதப்படுத்தப்பட்டன.
எனவே, தற்போது, வனப்பகுதியை ஒட்டிய முக்கிய பகுதிகளில் கிரானைட் கல் சுவர் எழுப்பி உள்ளோம். தேன்கனிக்கோட்டை-அஞ்செட்டி வனப்பகுதி சாலையில் 35 கி.மீ தூரம் நவீன இரும்பு கம்பிவட தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
- 100-க்கும் மேற்பட்ட இழுப்பை, புங்கன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மத்தூர்,
சென்னையில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான கோப்பை மாவட்டம் வாரியாக கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட கோப்பைக்கு ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் பாஸ் கர பாண்டியன் வரவேற்பு அளித்து, அறிமுகம் செய்து வைத்தார்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் பசுமை குழு உறுப்பினர் சத்தியராஜ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட இழுப்பை, புங்கன் மரக்கன்றுகள் மற்றும் மஸ்காட் உருவ சின்னம் பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
- சில வாரங்களுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.
- சின்ன வெங்காயத்துக்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு வகையான காய்கறி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல விவசாயிகள் ஊடுபயிராகச் சின்ன வெங்காயத்தை தங்கள் வீட்டுத் தேவைக்குச் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது, தக்காளி, சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதால், தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி தீவிரம் அடைந்துள்ளது.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
சின்ன வெங்காயத்துக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
மாவட்டத்தில் சின்ன வெங்காயம் நேரடியாகவும், சிலர் ஊடுபயிராகவும் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. தற்போது உழவர் சந்தையில் ரூ.100-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயம் சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். அறுவடை வரை தொடர்ந்து விலை உயர்வு கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
விலை சரிந்தாலும் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக வியாபாரிகள் சிலர் கூறுகையில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அறுவடை நடைபெற்று வரும் கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தில் வேடசந்தூர் பகுதியிலிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறோம்' என்றனர்.
- கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
- அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்” என்ற தலைப்பில் பேசினர்.
ஓசூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஓசூர் வட்டக் கிளை பேரவை கூட்டம், தெப்பக்குளம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு, வட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார்.
இதில் இணை செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். வட்ட செயலாளர் திம்மராஜ், செயலாளர் அறிக்கையையும், பொருளாளர் அருண்குமார் வரவு - செலவு அறிக்கையையும் வாசித்தனர்.
மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் பேசினர்.
சங்கத்தின் முன்னாள் மாநில தனிக்கையாளர் நடராஜன், "அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், தீர்வுகளும்" என்ற தலைப்பில் பேசினர்.
இதில் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், வட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
- ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய தேர்பேட்டையை சேர்ந்த சந்திரன், பாபு, தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
- ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்
- அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக அந்த பெண் மீது மோதியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள நஞ்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் நேற்று ஓசூர்-அத்தி பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஓசூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
- குறைந்த விலையில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் கோபி கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில், மத்தூர் மாநகர அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் கோபி கிருஷ்ணா பள்ளி தலைவர் எம்.கே.எஸ் மாதன் முன்னிலை வகித்தார். எம்.கே.எஸ் பள்ளியின் தாளாளர் புஷ்பக் தலைமை யேற்று, குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். பள்ளி துணைத் தலைவர் எம்.கே.எஸ் பிரசன்ன குமார் வாழ்த்துரை வழங்கினார்.
இம்முகாமில் கண்ணில் புரை, கண்ணில் நீர் வடிதல், உள்ளிட்ட அனைவருக்கும் விரிவான கண் பரிசோதனை செய்யப்பட்டு கண் மருத்துவர் கலந்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் கண்ணாடி அணிபவர்களின் கண்ணாடி பரிசோதித்து மிக குறைந்த விலையில் ஓரிரு நாட்களில் கண்ணாடி கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இப்பள்ளியில் படித்த மாணவி ரம்யா அரசு மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகியுள்ளார் என கோபி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் புஷ்பக் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த மாணவியை அனைவரும் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மத்தூர் மாநகர அரிமா சங்க உறுப்பினர்கள் பள்ளியின் முதல்வர் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் முதியோர் ஏராளமானோர் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா தலைமை தாங்கினார்.
- கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.
குருபரப்பள்ளி,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட குருபரப்பள்ளியில், காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் மாற்று கட்சியினர் கட்சியில் இணையும் விழா என முப்பெரும் விழா நடந்தது. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திம்மப்பா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக செல்லக்குமார் எம்.பி. கலந்து கொண்டு, காங்., கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து காங்கிரஸ் கட்சியில் புதிதாக இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இதில் முன்னாள் மாவட்டத் தலைவர்கள், கிருஷ்ண மூர்த்தி, ராஜேந்திர வர்மா, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இரவு தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது.
- ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அரசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன் (வயது47). இவர் அப்பகுதியில் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு இவரது தொழிற்சாலையில் திடீரென புகை வந்தது. தீ மளமள வென பற்றி எரிந்தது.
இது குறித்து போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தீயணைப்பு நிலைங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசாார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமாக விபத்து நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதியோர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து,மருத்துவ உதவியை அளிக்க வேண்டும்.
- பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தங்களை பராமரித்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அண்ணா திருமண மண்டபத்தில் கிராம சுகாதார பேரவை கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமரன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் முன்னிலை வகித்து அவர் பேசுகையில் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் பற்றியும், பெண்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தங்களை பராமரித்துக் கொள்வது பற்றியும் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பேசுகையில் செவிலியர்கள் அனைவரும் இல்லம் தேடி மருத்துவத்தின் மூலம் முதியோர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கண்டுபிடித்து,மருத்துவ உதவியை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சண்முகப்பிரியன், முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், கிராம சுகாதார செவிலியர்கள் ரோஜா, ரேவதி, தேவி லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஆவல்நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பில் ஒரு வழி தடத்திலிருந்து இருவழி தடமாக அகலப்படுத்தி வலுப்படுத்துதல், 3 இடங்களில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் மற்றும் 5 சிறுபாலங்கள் அமைக்கப்படுள்ள பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலையின் தரத்தை பரிசோதனை செய்தார். தொடர்ந்து கலெக்டர் சரயு நிருபர்களிடம் கூறியதாவது:-
தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் 14.10 கி.மீ நீளமுள்ள 3-மாவட்ட சாலைகள் ரூ.17 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் இருவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள், இதர மாவட் யாளர் சரவணன், உதவிக ்கோட்டப்பொறியாளர் ஜெய்குமார், உதவிக் கோட்டப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) பத்மாவதி, உதவிப்பொறியாளர் ரியாஸ் மு கமது மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






