என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் வழங்கல்"

    • சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.
    • 100-க்கும் மேற்பட்ட இழுப்பை, புங்கன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மத்தூர், 

    சென்னையில் 7-வது ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 3-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான கோப்பை மாவட்டம் வாரியாக கொண்டு செல்லப்படுகிறது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட கோப்பைக்கு ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் பாஸ் கர பாண்டியன் வரவேற்பு அளித்து, அறிமுகம் செய்து வைத்தார்.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பசுமை தாய்நாடு அறக்கட்டளை சார்பில் பசுமை குழு உறுப்பினர் சத்தியராஜ் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட இழுப்பை, புங்கன் மரக்கன்றுகள் மற்றும் மஸ்காட் உருவ சின்னம் பசுமைத்தாய்நாடு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.   

    ×