என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூர் மாநகராட்சியில் 1,2-வது மண்டலத்தில் தி.மு.க.வும், 3,4-வது மண்டலத்தில் அ.தி.மு.க. வும் வெற்றி பெற்றுள்ளனர்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள் உள்ளன.

    இந்த நிலையில் இன்று  காலை மண்டல தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. பிற்பகலில் நிலைக்குழு தலைவர்கள் தேர்தல் நடக்கிறது.

    1, 2-வது மண்டலத்தில் தி.மு.க. வெற்றி

    இன்று காலை நடந்த மாநகராட்சியின் 1&வது மண்டல தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ரவி 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் ரஜினிகாந்த் 4 வாக்குகள் பெற்றிருந்தார்.

    இதேபோல் 2-வது மண்டல தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட காந்திமதி கண்ணன், போட்டியின்றி வெற்றி பெற்றார்.

     அ.தி.மு.க. வெற்றி

    மாநகராட்சியின் 3&வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட புருசோத்தம ரெட்டி, 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர் எஸ்.மஞ்சம்மா , 3 வாக்குகள் பெற்றிருந்தார்.

     4-வது மண்டல தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெயபிரகாஷ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. கவுன்சிலர்  ஆர்.சென்னிரப்பா, 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மதுபோதையில் ஓட்டலில் தகராறு செய்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்துள்ள போலுபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது41). இவர் அங்குள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வரு கிறார்.

    இந்த நிலையில் நேற்று மதுபோதையில் ஓட்டலில் ஒருவர் தகராறு செய்தார். இதனால் தடுக்க சென்றவர்களை ஆபா சமாக திட்டியுள்ளார். 

    இது குறித்து முனிராஜ் குருபரப்பள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டலில் தகராறு செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவை சேர்ந்த சந்திரசேனன் (வயது31) என்று தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரியில் 55 கிலோ குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் முனிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது பெங்களூரு சாலையில் பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

    அவர்  கிருஷ்ணகிரி காந்திநகரை சேர்ந்த கமலேஷ் மேட்டா (வயது52) என்பவர் தெரியவந்தது. மேலும் அவர் தடைசெய்யப்பட்ட 55 கிலோ புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்து கொண்டி ருந்ததும் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 55 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.57 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
    கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பேக்கரி தொழிலாளி பலியானார்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி தாலுகா கங்கலேரி பகுதியை சேர்ந்தவர் அஸ்மத் (வயது45). இவர் காவேரிப்பட்டணம் பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். 

    இந்த நிலையில் இவர் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது கங்கலேரி கூட்ரோடு அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் படுகாயம் அடைந்த அஸ்மத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஸ்மத் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக சுற்றி வந்த வவ்வால்கள்
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள லட்சுமிபுரம் தெருவில் நேற்று மாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்கள்  கூட்டம் கூட்டமாக சுற்றி வந்தால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    லட்சுமிபுரம் கிராமத்தின் அருகே உள்ள ஒரு பெரிய புளிய மரத்தில் இரவு நேரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வவ்வால்கள் கூடியிருப்பது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் குடியிருந்த வவ்வால்கள் திடீரென்று மரத்தில் இருந்து வெளியேறி ஆயிரக்கணக்கான வவ்வால்களுடன் மற்றும் காகங்களும் சேர்ந்து வானில் வட்டமிட்டது. 

    இதனால் லட்சுமிபுரத்தில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை கூட்டம் கூட்டமாக 1000&க்கும் மேற்பட்ட வவ்வால்கள் குடியிருப்பு பகுதி மேல் வந்து வட்டமிட்டதால் அப்பகுதியில் பொதுமக்கள் சிறுவர்கள், வாகன ஓட்டிகள் வியப்புடன் நின்று பார்த்தனர். 

    சற்று நேரம் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வௌவால்கள் கூட்டம் வட்டமீட்டதால் பகுதியில் கருப்பு மேகம் போல் காணப்பட்டது. 

    இதையடுத்து அரைமணி நேரத்திற்கு பிறகு வவ்வால் கூட்டம்  கலைந்து மீண்டும் மரத்திற்க்கே சென்றுவிட்டது. குடியிருப்பு பகுதிக்கு மேலே சற்று நேரம் 1000&த்திற்கும் மேற்ப்ட்ட வவ்வால்கள் சூழ்ந்து கொண்டதால்  இப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 விவசாயிகள் பலியாகினர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கங்கமடுகு கிரமாத்தை சேர்ந்தவர் அம்சகிரி (வயது45), ராஜன் (30). இவர்கள் இருவரும் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். 

    இந்த நிலையில் நேற்று மாலை இவர்கள் இருவரும் மாணவரனபள்ளியில் இருந்து  வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. 

    இதில் தூக்கி வீசப்பட்டதில் அம்சகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த ராஜனை  மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

    இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு விசாரனை நடத்தி வருகின்றனர். 

    சாலை தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி
    கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து 250&க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக  தடுப்பு அரண்கள் நடுவே ஒட விடப்பட்டது. ஒவ்வொரு காளைகளும் இரண்டு சுற்றுகள் ஓட விடப்பட்டது.
    குறைந்த நேரத்தில் 125 மீட்டர் இலக்கை எட்டும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 லட்சமும் இரண்டாம் பரிசாக 80 ஆயிரம், மூன்றாவது பரிசாக 70 ஆயிரம்,  அடுத்தடுத்து ஆறுதல் பரிசாக 50 காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த எருது விடும் விழாவை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரில் அனைத்து தெருக்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்திட நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    கிருஷ்ணகிரி நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிதாநவாப் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, 33 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அனைவரையும் நகராட்சி கமிஷனர் முருகேசன் வரவேற்றார்.

    கூட்டத்தில் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகராட்சி தேர்தலை நடத்திய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    நகராட்சியில் அலுவலக பயன்பாட்டிற்கு நகராட்சி தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அமர்ந்து பேசும் வகையில் கூடம், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிட வசதி அமைப்பது, நகர்மன்ற கூட்டங்கள், அவசர கூட்டங்கள் நடத்த தேவையான வசதிகளுடன் கூட்டரங்கு அமைப்பது, நகராட்சிக்குட்பட்ட, 33 வார்டுகளில் உள்ள, 145 கை பம்புகளுடன் மேலும், 50 புதிய கைபம்புகள் அமைப்பது. சொத்துவரி மற்றும் நிலுவை தொகைகளை வசூலிப்பது, கிருஷ்ணகிரி புதிய பஸ்  நிலையத்தை 33.85 லட்ச ரூபாயில் புனரமைப்பது, மற்றும் புதிய, பழைய பஸ் நிலையங்களில் பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம், தினசரி சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமம், மற்றும் வரிகள் வசூலிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசியதாவது:&

    கிருஷ்ணகிரி நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கட்சி பேதமின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டு நகராட்சியை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும். மேலும் நமக்கு நாமே திட்டத்தில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் வழங்கப்பட்ட, 6.66 லட்ச ரூபாயில் புதிய கட்டடம் கட்டுவது, ஐ.வி.டி.பி. நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட, 10 லட்ச ரூபாயில் கிருஷ்ணகிரி நகர வீதிகள் தோறும் ‘சி.சி.டி.வி.’ கேமரா அமைப்பது.

    நகர தி.மு.க. செயலாளர் நவாப் வழங்கிய, 6 லட்ச ரூபாயில் இரண்டு உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது. இது போல் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் நகராட்சிக்கு தங்கள் பங்குகளுக்கு நிதிகளை வழங்கி நகராட்சியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பாடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாலை விபத்தில் பெண் பலியானார்.
    சூளகிரி, 
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பாரதிபுரம் பகுதியை சேர்ந்த வர் ரவி (வயது 35). இவரது மனைவி ரத்தினா மற்றும் தம்பி ராஜ் (30) மனைவி சாரதா (28).

    இந்த நிலையில் இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அணையை சுற்றிபார்க்க காரில் வந்தனர். காரை ரவி ஓட்டினார். அப்போது  - சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி எதிரே உள்ள மேம்பாலம் மேல் பகுதி சாலையில் கார் வந்தபோது பின்னால் அரசு பஸ் கார்மீது மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை கரையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் சாரதா படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். 

    இந்த விபத்து குறித்து சூளகிரி போளீசார் விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் கிளீனர் பலியானார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் இருந்து ஓசூர் நோக்கி ஜல்லி கலவை எந்திர லாரி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதே போல கோவையில் இருந்து பெங்களூரு நோக்கி தனியார் சொகுசு பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை திருச்சி லால்குடியை சேர்ந்த முருகேசன் (53) என்பவர் ஓட்டினார். கிளீனராக அதே ஊரை சேர்ந்த ஆல்பர்ட் (25) என்பவர் இருந்தார். 

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்ற இடம் அருகில் லாரி சென்ற போது பின்னால் சென்ற சொகுசு பஸ் லாரியின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் பஸ்சின் கிளீனர் ஆல்பர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார். 

    மேலும் பஸ்சில் பயணம் செய்த தேவக்கோட்டை காமராஜ் (33), பெங்களூரு கே.ஆர்.புரம் செல்லதுரை (53), ஊட்டி பச்சிராஜ் (57), புதுக்கோட்டை சுரேஷ் (42), திருச்சி ஹரி (20) உள்பட 8 பேர் காயம் அடைந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் விபத்தில் பலியான ஆல்பர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் 2 நாட்கள் நடந்த தட்டச்சு தேர்வில் 1302 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    கிருஷ்ணகிரி, 

     கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேகத் தேர்வு ஆகிய பாடங்களில் தட்டச்சுத் தேர்வுகள் நடந்தன.

    இத்தேர்வுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சு பள்ளிகளின் சார்பில், ஆங்கிலம் தட்டச்சுத் தேர்வில் 868 மாணவ, மாணவியரும், தமிழ் தட்டச்சு தேர்வில் 434 மாணவ, மாணவியர் என மொத்தம் 1302 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வுகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து மற்றும் சுபா ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் முனைவர் ராபர்ட் கிளைவ், பிரபாகரன், முனைவர் சுவாமி தாஸ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்தது. தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் இருந்து பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பிரசித்திபெற்ற பேட்டராய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கோலா கலமாக நடைபெறும். கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா வரும் ஏப்ரல் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா ஏப்ரல் 13-ஆம் தேதி நடக்கிறது. திருவிழாவுக்கான தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது.

    முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து பால்கம்பத்தை எடுத்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து தேருக்கு பூஜைகள் செய்து புனிதநீர் தெளித்து  வேத மந்திரங்கள் ஓதி  மேளதாளங்கள் முழங்க பால் கம்பம் நட்டு  பூஜைகள் செய்யப்பட்டது.
    ×