என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி அருகே எருது விடும் விழா
கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் வேலூர் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இருந்து 250&க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக தடுப்பு அரண்கள் நடுவே ஒட விடப்பட்டது. ஒவ்வொரு காளைகளும் இரண்டு சுற்றுகள் ஓட விடப்பட்டது.
குறைந்த நேரத்தில் 125 மீட்டர் இலக்கை எட்டும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 லட்சமும் இரண்டாம் பரிசாக 80 ஆயிரம், மூன்றாவது பரிசாக 70 ஆயிரம், அடுத்தடுத்து ஆறுதல் பரிசாக 50 காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த எருது விடும் விழாவை சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
Next Story






