என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி, ஓசூரில் தட்டச்சு தேர்வில் 1302 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

    கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் 2 நாட்கள் நடந்த தட்டச்சு தேர்வில் 1302 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
    கிருஷ்ணகிரி, 

     கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை மற்றும் உயர்வேகத் தேர்வு ஆகிய பாடங்களில் தட்டச்சுத் தேர்வுகள் நடந்தன.

    இத்தேர்வுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகவியல் தட்டச்சு பள்ளிகளின் சார்பில், ஆங்கிலம் தட்டச்சுத் தேர்வில் 868 மாணவ, மாணவியரும், தமிழ் தட்டச்சு தேர்வில் 434 மாணவ, மாணவியர் என மொத்தம் 1302 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

    தேர்வுகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து மற்றும் சுபா ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் முனைவர் ராபர்ட் கிளைவ், பிரபாகரன், முனைவர் சுவாமி தாஸ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் நடந்தது. தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தில் இருந்து பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
    Next Story
    ×