என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
55 கிலோ குட்கா கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரியில் 55 கிலோ குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் முனிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெங்களூரு சாலையில் பழைய சென்ட்ரல் தியேட்டர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் கிருஷ்ணகிரி காந்திநகரை சேர்ந்த கமலேஷ் மேட்டா (வயது52) என்பவர் தெரியவந்தது. மேலும் அவர் தடைசெய்யப்பட்ட 55 கிலோ புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்து கொண்டி ருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 55 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.57 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story






