என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ரூ.27 லட்சம் பறித்த வாலிபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சின்ன ஏலசகிரி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் குமுதா (வயது 37). திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

    இந்த நிலையில் மறுமணம் செய்வதற்காக தனியார் திருமண மையத்தில் குமுதா, பதிவு செய்திருந்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்தில் இருந்து பேசுவதாக ஒரு வாலிபர் அறிமுகமாகி பேசியுள்ளார். அவர் கடந்த ஆண்டில் இருந்து குமுதாவிடம் இ-மெயில் மூலம் தினமும் தொடர்பில் இருந்துள்ளார்.

    அப்போது தன்னை கண் மருத்துவர் என அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். மேலும் குமுதாவை தனக்கு பிடித்துள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பி குமுதாவும் பேசி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் ரூ.80 ஆயிரம் டாலரை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதனை பெற்று கொள்வதற்காக நீங்கள் கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் செய்து கொள்ள பணத்தை கட்டி விடுங்கள் என்று கூறினார். மேலும் அதற்காக 7 வங்கி கணக்கு விவரங்களையும் குமுதாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த வங்கி கணக்குக்கு சிறிது சிறிதாக குமுதாவும், ரூ.27.66 லட்சம் வரை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த வாலிபர், குமுதாவுடன் பேசுவதை திடீரென நிறுத்தி விட்டார்.

    இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமுதா, இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்,

    கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோகுல் (வயது 22). இவர் கொத்தகொண்டப்பள்ளி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 31&ந் தேதி அதிகாலையில் அவர் வீடு அருகில் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒருவர் ஜோகுலை மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.200&ஐ கத்தி முனையில் பறித்து சென்றார்.

    இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதல் ஜோகுலை மிரட்டி பணம் பறித்தது சூர்யா (21), ஓசூர் ஒன்னல்வாடி சோமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது. மேலும் அவர் மீத ஓசூர் டவுன் போலீசில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெண்களை கேலி& கிண்டல் செய்து தாக்கிய கும்பலை கைது செய்ய கோரி கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    சூளகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பீர்பள்ளி, மல்லசந்திரம் ஆகிய 2 கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் அருகே உள்ள பெரியகுதிபலா  கிராமத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    இந்த நிலையில் பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 10&க்கும் மேற்பட்ட கும்பல், அந்த வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை கேலி& கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் கடந்த 27&ந் தேதி, பெண்களை பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 4 பேர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது இதை தட்டி கேட்ட 2 பெண்களை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் திருமணமான ஒரு பெண்ணுக்கு, கருக்கலைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள், இந்த சம்பவம் பற்றி சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று பீர்பள்ளி, மல்லசந்திரம் கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 100&க்கும் மேற்பட்டோர்  சூளகிரி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள், பெண்களை தொடர்ந்து கேலி & கிண்டல் செய்து தாக்கி வரும் பெரியகுதிபலா கிராமத்தை சேர்ந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போ ராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.

    இதையடுத்து டி.எஸ்.பி.சிவலிங்கம், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 அல்லது 3 நாளில் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    இதை ஏற்று 2 கிராமங்களை சேர்ந்த மக்களும், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை பகுதியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட் டனர். 

    அப்போது கீழ்மத்தூர் சுடுகாடு அருகே பனந்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது25)  என்பவர் கஞ்சா விற்பனை செய்த தாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 540 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
     
    கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள முல்கனூர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது50). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 27ந்தேதி அன்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு நடந்தது. இதில் ஆத்திரமடைந்த முருகன், அதே பகுதியை சேர்ந்த லட்சுமணனுடன் சேர்ந்து வேலாயுதத்தை உலக்கையால் அடித்து தாக்கியுள்ளனர். 

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த வேலாயுதத்தை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக வேலாயுதம் உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து முருகன், லட்சுமணன் ஆகியோரை கைது செய்தனர். கைதான அவர்களை கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் மதுவிற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கொடமாண்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் அனுமதியின்றி பதுக்கி வைத்து மதுவிற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக வள்ளியம்மா (வயது60) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடும் விலை சரிவால் பீர்க்கங்காய், மாடுகளுக்கு தீவனமாகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாணவரப்பள்ளி, நாச்சிகுப்பம், கொல்லப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பீர்க்கங்காய் விளைச்சல் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் இங்கிருந்து பீர்க்கங்காய் விளைச்சல் மற்றும் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் பெங்களூரு கேஜிஎப், கோலார் மற்றும் ஆந்திரம் கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது பீர்க்கங்காய் விலை கிலோ ரூபாய் 2 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தங்களது முதலீட்டை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் விளைச்சலில் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். 

     கடும் விலை வீழ்ச்சியால் பீர்க்கங்காயை அறுவடை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே செடிகளில் காய்ந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் விவசாய தோட் டத்தில் தற்போது விலை குறைவால் பீர்க்கங்காய் அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே காய்ந்து இருப்பதை பார்த்து மற்ற விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர். தற்போது இந்த பீர்க்கங்காயை மாடுகளுக்கு தீவனமாக விவசாயிகள் போட்டு வருகின்றனர்.
    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமி இன்று காலை சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் சூளகிரி அருகே உள்ள சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் சூளகிரி அருகே அய்யர்னபள்ளி, உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஊராட்சிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் விவசாய நிலங்களை கையகப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் தொழிற்சாலைகளுக்கு விவசாய நிலங்களை எடுப்பதால் அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி தொகுதி எம்.எல்.ஏ.வான கே.பி.முனுசாமி, சூளகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தனிநபராக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

    கே.பி.முனுசாமி, தனி ஆளாக போராட்டத்தை தொடங்கியதால் அங்கு அ.தி.மு.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு சூளகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    ஓசூர், 

    மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான, அடையாள அட்டை வழங்கும்  மருத்துவ முகாம் நாளை (1-&ந்தேதி) நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. 

    ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ்  தலைமை தாங்கி பேரணியை  தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு  கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

    மேலும் இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள்,தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலமானது,  காமராஜர் காலனியில் உள்ள ஆர்.வி.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி உழவர் சந்தை சாலை, தாலுகா அலுவலக சாலை, நேதாஜி சாலை, எம்ஜி சாலை வழியாக சென்று பின்னர், வட்டார வள மையத்தில் வட்டார வள மையத்தில் நிறைவு பெற்றது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சகோ தரியின் தோட்டத்தில் 600 வாழைகளை வெட்டி வீசிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி.  இவருக்கு பிரேமாகுமாரி, கலாவதி, ரேணுகா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர். முனுசாமிக்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தை மூத்த மகளான பிரேமாகுமாரி கடந்த 5 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

    தற்போது பிரேமாகுமாரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 600 வாழைகளை நடவு செய்திருந்தார். இதற்காக அவர் சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளார். 

    இந்த நிலையில், நேற்று இரவு அவரது தோட்டத்திற்கு சென்ற மர்ம கும்பல் இரவோடு இரவாக அங்கு நடவு செய்யப் பட்டிருந்த 600 வாழை செடிகளையும்  வெட்டி சாய்த்து அங்கிருந்து வாகனத்தின் மூலம் எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    இன்று காலையில் தோட்டத்திற்கு சென்ற பிரேமா குமாரி தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை செடிகளை பிடுங்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஏற்கனவே பிரேமா குமாரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சோளம் மற்றும் முள்ளங்கி செடிகளை விவசாயம் செய்த போது அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி  சொத்து தகராறு காரணமாக நடவு செய்த செடிகளை அழித்ததாக கூறப் படுகிறது. 

    அதுபோலவே தற்போதும் வாழை செடிகளை கிருஷ்ணமூர்த்தி, மர்ம கும்பல் மூலம்  வெட்டி சாய்த் துள்ளார் என்று  அவர் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பெயரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே  மேலூரை சேர்ந்தவர்கள் சிவசங்கர் (வயது 23), முனியப்பா (22).  நண்பர்களான இருவரும் கட்டுமான பணிக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் இருவரும் உகாதி பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு வந்தனர். பின்னர் நேற்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக சிவசங்கர் , முனியப்பா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருதுகோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சிவசங்கர், முனியப்பா ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டிப்பர் லாரி மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியான சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மொபட்டியில் மான்கறி கடத்திய சிறுவனை போலீசார் கைது செய்தனர்
    பென்னாகரம், 

    கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு புள்ளி மான் கறி கொண்டு வரப்படுவதாக மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடுவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    அதன்பேரில் பென்னாகரம் சரக அலுவலர் முருகன் தலைமையில் வனவர் செல்லமுத்து, வனக் காப்பாளர்கள் ஆனந்தராஜ். தங்கவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் பென்னாகரம்&தருமபுரி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது பி.அக்ரகாரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மொபட்டில் சந்தேகப்படும் வகையில் வந்த மொப்பட்டை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் மொபட்டில் புள்ளி மான் கறி கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்த காவேரி மகன் ஹரிஸ் (வயது 17) என்பது தெரியவந்தது. மேலும் இவரைப் பின்தொடர்ந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூபாலன் (37) என்பவர் தப்பி சென்றுவிட்டார்.

    தப்பி ஓடிய பூபாலனை வனத்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் மான்கறி கடத்தி வந்த ஹரிஸ் கைது செய்யப்பட்டதுடன் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

    மேலும் தருமபுரி மாவட்ட காப்பு காடுகளில் விலங்கு களை வேட்டையாடும் நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ×