என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராயசுவாமி கோவில் மிக புராதனமான கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஸ்ரீசவுந்தர்யவல்லி தாயார் சமேத ஸ்ரீபேட்டராயசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடபிறப்பு) அன்று திருக்கல்யாண உற்சவம் மிக சிறப்பாக நடை பெறும். அதுபோல் இந்த வருடமும் யுகாதி பண்டிகையை யொட்டி நேற்று இரவு சுவாமிகளுக்கு திருக்கல்யான உற்சவம் மிக விமர்சனமாக நடைபெற்றது. இந்த திருக்கல்யான உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். பெருமாள், தாயார் திருக்கல்யான உற்சவம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று சேர்வதை குறிப்பிடும் உற்சவமாகும். அனைவரும் பெருமாள், தாயார் திருகல்யான உற்சவத்தை சேவித்து சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்பது இந்த உற்சவத்தின் ஐதீகம் ஆகும். முன்ன தாக கோயில் முழுவதும் மாவிலை தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கபட்டு, வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க பெருமாளுக்கும், தாயாருக்கும் தனித்தனியாக பூ அலங்காரம் செய்யப்பட்டு எதிரெதிரே நிற்க வைத்து பூ மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறகு யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க, பெண்கள் சீர்வரிசை களோடு வந்து மேளதாளங்கள் முழங்க கோயில் மூத்த அர்ச்சகர் கண்ணன் திருமங்கள நாண் சூட திருக்கல்யான உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியின் அருள்பெற்றனர். இந்த உற்சவம் தேன்கனிகோட்டை ஜோதிநகர குலத்தார் பரம்பரையாக செய்துவருகிறார்கள். இதனை தொடர்ந்து வருகிற 13&ந் தேதி (புதன்கிழமை) அன்று கோவிலில் தேர்திருவிழா நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக 5 இடங்களில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்,
ஓசூரில், மாவட்ட எஸ்.பி.சரோஜ்குமார் டாகுர் நடவடிக்கையின் பேரில், 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பொதுமக்கள் நடைபயணம், சைக்கிளிங், ஜாகிங் மேற்கொள்ள ஏதுவாக போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திகிரி ஜங்ஷன் முதல் அந்திவாடி ஸ்டேடியம் வரையிலும், , தர்கா முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து வென்ட் இந்தியா கம்பெனி வரை, கொத்தூர் ஜங்ஷனில் இருந்து டிவிஎஸ் ரோடு ஜங்ஷன் வரையிலும்,
சப் -கலெக்டர் அலுவலகம் முதல் சென்ட்ரல் எக்சைஸ் அலுவலகம் ( லேக் ரோடு.) வரையிலும், பத்தலபள்ளி ஜங்ஷனில் இருந்து காளிகாம்பாள் கோவில் ஜங்ஷன் வரை. இந்த 5 இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரை அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,
இன்று காலை, இந்த நிகழ்ச்சியை, ஓசூர் சப்-&கலெக்டர் அலுவலகம் முன்பு கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட எஸ்.பி, சரோஜ்குமார் டாகுர், பொதுமக்களுடன், மாநகராட்சி பூங்கா பகுதிவரை நடைபயணம் மேற்கொண்டார்.
மேலும், அவர் நிருபர்களிடம் கூறும் போது"இது ஒரு சோதனை முயற்சியாகும். இந்த முயற்சிக்கு, பொதுமக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை
பொறுத்து, நேரத்தை மாற்றவும், குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நடைபயணத்தையொட்டி, இந்த பகுதிகளில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் மற்றும் அவசர சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். ஓசூர் பகுதி வழியாக கஞ்சா மற்றும் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், வேப்பனப்பள்ளி, மகாராஜகடை, பேரிகை, பாகலூர் ஆகிய சோதனை சாவடிகளில் "பார்டர் போலீஸ் கமாண்டோ" படை அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்படும்" என்றார்.
மேலும் இதில், ஓசூர் டி.எஸ்.பி.சிவலிங்கம், டவுன் இன்ஸ் பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர் .
கிருஷ்ணகிரி மாவட்டம் அரியக்கா, பெரியக்கா கோவில் விழாவில் 10 ஆயிரம் ஆடுகளை பலியிட்டு பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச் சம்பள்ளி அருகே உள்ள மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் அரியக்கா, பெரியக்கா சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற திருவிழாவில் எட்டிபட்டி கிராமத்தில் இருந்து சுவாமி சிலைகள் தலையில் சுமந்து வரப்பட்டு கரடியூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப் பட்டன. கோவிலில் உள்ள ராட்சத ஊஞ்சலில் சுவாமிகள் வைத்து தாலாட்டும் உற்சவம் நடந்தது இந்த நிகழ்ச்சியால் சுவாமிகள் கலைப்பதற்காக பக்தர் களின் நம்பிக்கைஆகும்.
நேற்று மாலை மருதேரி தென்பெண்ணை ஆற்றில் சிலைகளுக்கு புனித நீராடி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது அங்கீகரிக் கப் பட்டு வாயில் துணி கட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு முழுதும் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் பக்தர்கள் நேர்த்திக் கடனாக கோயிலுக்கு அளித்த சுமார் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. அவற்றை விளக் கெண்ணையில் வேக வைத்து பக்தர்களுக்கு பிரசா தமாக வழங்கப்பட்டது.
கற்பூரம்
அரியக்கா பெரியக்கா சுவாமி கோவில் வளாகத்தில் மின்சார விளக்குகளை பயன்படுத்துவது இல்லை.இதனால் இரவு முழுவதும் கோவில் விழா கற்பூர ஒளியிலேயே நடக்கும். இதற்காக ரூ 10 லட்சம் மதிப்புள்ள கற் பூரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் கருப்பு ஆடைகளை அணிய பக்தர்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. கருப்புநிற பொருட்களையும் பக்தர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. தற்போது பக்தர்கள் செல்போன்களின் பயன் படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, வேப்பனபள்ளி தொகுதி களை தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப் பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி தோட்டக்கலை சாகுபடி விவசாயிகள் அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, அமைப்பின் தலைவர் ராமு, தலைமை தாங்கினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பின்னர்அமைப்பின் தலைவர் ராமு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
"ஓசூர் பகுதி, காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலையை கொண்ள்ளது. இங்கிருந்து, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள், சென்னை, கோவை மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த பகுதிகளில், விவசாய நிலங்களை, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை தவிர்த்து, ஓசூர், தளி, வேப்பனபள்ளி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை, "தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலமாக "அறிவித்து, ஆணை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் இந்த கோரிக்கைக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.
தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த பகுதிகளில் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் உருவாகி அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்துவரும், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.கே.பி.முனுசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்".
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
மருத்துவர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 250 மருத்துவமனைகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் இறந்துவிட்டதால் பிரசவம்பார்த்த மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த மருத்துவர் அர்ச்சனா அப்பாவி மருத்துவர்களைதுன்புறுத்தாதீர்கள் என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
மருத்துவர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு உரியபாதுகாப்பு வழங்க கோரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 200 கிளினிக்குகள் மற்றும் 50 மருத்துவமனைகள் என 250 சிகிச்சை மையங்களில் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புற நோயாளிகள் சிகிச்சையை தவிர்த்து மருத்துவமனையை அடைத்திருந்தனர்.மேலும் தங்களது மருத்துவமனை முன்பு மருத்துவர் மீது தவறான வழக்கு பதிவுசெய்த காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அர்ச்சனா குடும்பத்திற்க்குஇழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கமத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவுசெய்யும் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், நுகர்வோர்பாதுகாப்பு சட்டத்தில் இருந்து இந்திய மருத்துவத் துறைக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டினார்கள். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிக் குள்ளானார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எலக்ட்ரீக்கல் கடைக்காரரின் வங்கி கணக்கில் ரூ.65 ஆயிரம ¢மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள தின்னூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது38). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 22&ந்தேதி அன்று இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் மாயமானது. இது குறித்து அவர் வங்கியை அணுகி விபரம் கேட்டார். அப்போது உங்களது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் மர்ம நபர் பணம் எடுத்துள்ளதாக கூறினார்.
இதனால் பதறி போன அவர் உடனே கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது தினேஷ்குமார் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் வெப்சைட் மூலம் பணம் திருடிய கர்நாடகமாநிலம், ஆனேக்கல் அடுத்துள்ள பல்லூர் பகுதியை சேர்ந்த காந்தராஜ் (24) என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் மீன் வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழைய பேட்டை லட்சுமண நாட்டார் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது35). இவர் பழைய பேட்டையில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் நேற்றுமுன்தினம் 3 பேர் வந்து மீன் சாப்பிட்டு கொண்டிருந்தனர். சாப்பிட்டு விட்டு உங்கள் கடையில் உள்ள மீன் நல்லா இல்லை. கெட்டுபோன பழைய மீன் வைத்து விற்பனை செய்துள்ளீர்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனே அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து சங்கர் இரவில் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த மர்ம நபர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கரை வழிமறித்து மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சங்கர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்காளிதெருவை சேர்ந்த கண்ணன் (23) என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கொத்தபேட்டைகாலனியை சேர்ந்த சுரேஷ், சுறா என்கிற ரித்திக் ஆகிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் பெங்களூரு&கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அதில் 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் கஞ்சா கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாப்பாரப்பட்டியை சேர்ந்த பெரியகண்ணன் (வயது31), சூளகிரி கல்லுகுறுக்கியை சேர்ந்த முருகன் (25), அட்டகுறுக்கியை சேர்ந்த ரஞ்சித்குமார் (19), கொடியூரை சேர்ந்த சந்தோஸ் (30) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான அவரிகளிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் 1Ñ லட்சம் மதிப்பு இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கைதான அவர் களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், இரும்பு கம்பியால் அடித்து கூலி தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீ சார் கைது செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சந்தோஷ் (வயது20). கடந்த 2020ஆம் ஆண்டு, இவரது சகோதரி அஸ்வினி என்பவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு தனது மாமாவின் நண்பரான ஓசூர் காளேகுண்டா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யாரப் என்பவர்தான், தனது சகோதரியை கொலை செய்ய தூண்டியதாக கருதி, அவரை பழிவாங்க முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று ஓசூர் சானசந்திரம் பகுதியில் இருந்த யாரப்பை, இரும்புக்கம்பியால் தாக்கியும், கல்லை தூக்கிப் போட்டும் கொன்றார்.
இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் யாரப் பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தோசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ரூ.12 லட்சம் பொருட்களுடன் சென்ற லாரி கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், - சூளகிரி அருகே காமன்தொட்டி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் உதிரிபாகங்களை கடந்த 29-ந்தேதி இரு லாரிகளில் ஏற்றி அனுப்பபட்டது.
இந்த உதிரிபாகங்களை பெங்களூரு இளங்கா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த லாரி அந்த நிறுவனத்திற்கு போய் சேரவில்லை. அந்த லாரிகளை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக தெரியவந்தது.
இது குறித்து சூளகிரி போலீசில் காமன்தொட்டி தனியார் நிறுவனர் கார்த்திக் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண்ணை வெட்டிய தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
ஓசூர் சிப்காட் பேகேப்பள்ளியை சேர்ந்தவர் நாகரத்தினம்மா (வயது 41). இவரது வீட்டில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஸ்ரீராமனூரை சேர்ந்த சசிக்குமார் (33) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். மேலும் சசிக்குமார் தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சசிக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை காலி செய்தார். அப்போது அவர் முன்பணமாக கொடுத்த ரூ.2,500&ஐ திரும்ப கேட்டார். ஆனால் நாக ரத்தினம்மா அந்த தொகையை தர முடியாது என தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் அரிவா ளால் நாகரத்தினம்மாவை வெட்டினார். இதில் காயம் அடைந்த நாகரத்தினம்£ சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலியானார்.
குருபரப்பள்ளி,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் யுகேந்திரன் (வயது 21). இவர் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 30&ந் தேதி மாலை அவர் ஓசூர் & கிருஷ்ணகிரி சாலையில் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






