என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதேரியில் உள்ள அரியக்கா, பெரியக்கா கோவில் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    மருதேரியில் உள்ள அரியக்கா, பெரியக்கா கோவில் திருவிழாவில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

    அரியக்கா, பெரியக்கா கோவில் விழா: 10 ஆயிரம் ஆடுகளை பலியிட்டு பக்தர்களுக்கு பிரசாதம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் அரியக்கா, பெரியக்கா கோவில் விழாவில் 10 ஆயிரம் ஆடுகளை பலியிட்டு பக்தர் களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச் சம்பள்ளி அருகே உள்ள மருதேரி தென்பெண்ணை ஆற்றங்கரையில் அரியக்கா, பெரியக்கா சுவாமி கோவில் உள்ளது. 

    இக்கோவிலில் 2 ஆண்டு களுக்கு ஒருமுறை யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருவிழா நடைபெறுகிறது.

    நேற்று நடைபெற்ற திருவிழாவில் எட்டிபட்டி கிராமத்தில் இருந்து சுவாமி சிலைகள் தலையில் சுமந்து வரப்பட்டு கரடியூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலுக்கு எடுத்து வரப் பட்டன. கோவிலில் உள்ள ராட்சத ஊஞ்சலில் சுவாமிகள் வைத்து தாலாட்டும் உற்சவம் நடந்தது இந்த நிகழ்ச்சியால் சுவாமிகள் கலைப்பதற்காக பக்தர் களின் நம்பிக்கைஆகும்.

     நேற்று மாலை மருதேரி தென்பெண்ணை ஆற்றில் சிலைகளுக்கு புனித நீராடி கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது அங்கீகரிக் கப் பட்டு வாயில் துணி கட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு முழுதும் பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. 

    பின்னர் பக்தர்கள் நேர்த்திக் கடனாக கோயிலுக்கு அளித்த சுமார் 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. அவற்றை விளக் கெண்ணையில் வேக வைத்து பக்தர்களுக்கு பிரசா தமாக வழங்கப்பட்டது.

    கற்பூரம்

    அரியக்கா பெரியக்கா சுவாமி கோவில் வளாகத்தில் மின்சார விளக்குகளை பயன்படுத்துவது இல்லை.இதனால் இரவு முழுவதும் கோவில் விழா கற்பூர ஒளியிலேயே நடக்கும். இதற்காக ரூ 10 லட்சம் மதிப்புள்ள கற் பூரம் பயன்படுத்தப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் கருப்பு ஆடைகளை அணிய பக்தர்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. கருப்புநிற பொருட்களையும் பக்தர்கள் எடுத்துச் செல்லக் கூடாது. தற்போது பக்தர்கள் செல்போன்களின் பயன் படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.  

    Next Story
    ×