என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாக்டர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம்
மருத்துவர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
மருத்துவர் அர்ச்சனா தற்கொலைக்கு நீதி கேட்டு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 250 மருத்துவமனைகள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் இறந்துவிட்டதால் பிரசவம்பார்த்த மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் மனமுடைந்த மருத்துவர் அர்ச்சனா அப்பாவி மருத்துவர்களைதுன்புறுத்தாதீர்கள் என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலைசெய்து கொண்டார்.
மருத்துவர் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மருத்துவர் அர்ச்சனா மீது கொலை வழக்குபதிவு செய்த இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்களுக்கு உரியபாதுகாப்பு வழங்க கோரி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் 200 கிளினிக்குகள் மற்றும் 50 மருத்துவமனைகள் என 250 சிகிச்சை மையங்களில் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புற நோயாளிகள் சிகிச்சையை தவிர்த்து மருத்துவமனையை அடைத்திருந்தனர்.மேலும் தங்களது மருத்துவமனை முன்பு மருத்துவர் மீது தவறான வழக்கு பதிவுசெய்த காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், அர்ச்சனா குடும்பத்திற்க்குஇழப்பீடு வழங்க வேண்டும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கமத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும், மருத்துவர்களை குற்றவாளிகளாக பதிவுசெய்யும் இந்திய தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், நுகர்வோர்பாதுகாப்பு சட்டத்தில் இருந்து இந்திய மருத்துவத் துறைக்கு விலக்குஅளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டினார்கள். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் அவதிக் குள்ளானார்கள்.
Next Story






