என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டையில் உள்ள பேட்டராயசுவாமி கோவில் மிக புராதனமான கோவிலாக விளங்கி வருகிறது.  இக்கோவிலில் ஸ்ரீசவுந்தர்யவல்லி தாயார் சமேத ஸ்ரீபேட்டராயசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். 

    இக்கோவிலில் ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை  (தெலுங்கு வருடபிறப்பு) அன்று திருக்கல்யாண உற்சவம் மிக சிறப்பாக நடை பெறும். அதுபோல் இந்த வருடமும் யுகாதி பண்டிகையை யொட்டி நேற்று இரவு சுவாமிகளுக்கு திருக்கல்யான உற்சவம் மிக விமர்சனமாக நடைபெற்றது. இந்த திருக்கல்யான உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். பெருமாள், தாயார் திருக்கல்யான உற்சவம் என்பது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று சேர்வதை குறிப்பிடும் உற்சவமாகும். அனைவரும் பெருமாள், தாயார் திருகல்யான உற்சவத்தை சேவித்து சம்சாரக்கடலை தாண்ட வேண்டும் என்பது இந்த உற்சவத்தின் ஐதீகம் ஆகும். முன்ன தாக கோயில் முழுவதும் மாவிலை தோரணங்களாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கபட்டு, வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்க பெருமாளுக்கும், தாயாருக்கும் தனித்தனியாக பூ அலங்காரம் செய்யப்பட்டு எதிரெதிரே நிற்க வைத்து பூ மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

     பிறகு யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் முழங்க, பெண்கள் சீர்வரிசை களோடு வந்து மேளதாளங்கள் முழங்க கோயில் மூத்த அர்ச்சகர் கண்ணன் திருமங்கள நாண் சூட திருக்கல்யான உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியின் அருள்பெற்றனர். இந்த உற்சவம் தேன்கனிகோட்டை ஜோதிநகர குலத்தார் பரம்பரையாக செய்துவருகிறார்கள். இதனை தொடர்ந்து வருகிற 13&ந் தேதி (புதன்கிழமை) அன்று கோவிலில் தேர்திருவிழா நடைபெறுகிறது.

    Next Story
    ×