என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிய விலை கிடைக்காததால் செடிகளில் பீர்க்கங்காய்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    உரிய விலை கிடைக்காததால் செடிகளில் பீர்க்கங்காய்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கடும் விலை சரிவு: மாடுகளுக்கு தீவனமாகும் பீர்க்கங்காய் விவசாயிகள் கவலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் கடும் விலை சரிவால் பீர்க்கங்காய், மாடுகளுக்கு தீவனமாகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வேப்பனப்பள்ளி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியனப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாணவரப்பள்ளி, நாச்சிகுப்பம், கொல்லப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பீர்க்கங்காய் விளைச்சல் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

    இந்த நிலையில் இங்கிருந்து பீர்க்கங்காய் விளைச்சல் மற்றும் அறுவடை செய்யப்பட்டு தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் பெங்களூரு கேஜிஎப், கோலார் மற்றும் ஆந்திரம் கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 

    தற்போது பீர்க்கங்காய் விலை கிலோ ரூபாய் 2 முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தங்களது முதலீட்டை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் விளைச்சலில் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். 

     கடும் விலை வீழ்ச்சியால் பீர்க்கங்காயை அறுவடை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே செடிகளில் காய்ந்து கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் விவசாய தோட் டத்தில் தற்போது விலை குறைவால் பீர்க்கங்காய் அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே காய்ந்து இருப்பதை பார்த்து மற்ற விவசாயிகள் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர். தற்போது இந்த பீர்க்கங்காயை மாடுகளுக்கு தீவனமாக விவசாயிகள் போட்டு வருகின்றனர்.
    Next Story
    ×