என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழைகள் பிடுங்கி எறியப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    வாழைகள் பிடுங்கி எறியப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    சகோதரியின் தோட்டத்தில் 600 வாழைகளை வெட்டி வீசிய விவசாயி சொத்து தகராறில் ஆத்திரம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே சகோ தரியின் தோட்டத்தில் 600 வாழைகளை வெட்டி வீசிய விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி.  இவருக்கு பிரேமாகுமாரி, கலாவதி, ரேணுகா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர். முனுசாமிக்கு சொந்தமாக 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ஒரு ஏக்கர் நிலத்தை மூத்த மகளான பிரேமாகுமாரி கடந்த 5 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

    தற்போது பிரேமாகுமாரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் 600 வாழைகளை நடவு செய்திருந்தார். இதற்காக அவர் சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளார். 

    இந்த நிலையில், நேற்று இரவு அவரது தோட்டத்திற்கு சென்ற மர்ம கும்பல் இரவோடு இரவாக அங்கு நடவு செய்யப் பட்டிருந்த 600 வாழை செடிகளையும்  வெட்டி சாய்த்து அங்கிருந்து வாகனத்தின் மூலம் எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    இன்று காலையில் தோட்டத்திற்கு சென்ற பிரேமா குமாரி தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை செடிகளை பிடுங்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஏற்கனவே பிரேமா குமாரி தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சோளம் மற்றும் முள்ளங்கி செடிகளை விவசாயம் செய்த போது அவரது தம்பி கிருஷ்ணமூர்த்தி  சொத்து தகராறு காரணமாக நடவு செய்த செடிகளை அழித்ததாக கூறப் படுகிறது. 

    அதுபோலவே தற்போதும் வாழை செடிகளை கிருஷ்ணமூர்த்தி, மர்ம கும்பல் மூலம்  வெட்டி சாய்த் துள்ளார் என்று  அவர் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பெயரில் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    Next Story
    ×