என் மலர்
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ராமாபுரம் அடுத்த ஜக்கரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரபிரகாஷ் (வயது 39). கூலித்தொழிலாளி; அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55).
கூலித்தொழிலாளி. உறவினர்களான இவர்களுக்குள் நிலப்பிரச்னை இருந்த நிலையில் கடந்த, 6-ந் தேதி ஏற்பட்ட தகராறில் கண்ணன், சந்திரபிரகாஷை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சந்திரபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கண்ணனை கைது செய்தனர்.
இளம்பெண்ணிடம் கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி 2 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உத்தனபள்ளி சாலையில் பெல்லட்டி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஓட்டலில், சூளகிரி போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் முருகானந்தம், மாரியப்பா என்ற போலீசார், உணவு வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், அவர்கள் இருவரும், ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் தரமறுத்தால், கர்நாடக மதுபானங்கள் மற்றும் கஞ்சா பொட்டலத்தை வைத்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் இருவரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓசூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், முருகானந்தம், மாரியப்பா ஆகிய 2 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உத்தனபள்ளி சாலையில் பெல்லட்டி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஓட்டலில், சூளகிரி போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் முருகானந்தம், மாரியப்பா என்ற போலீசார், உணவு வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், அவர்கள் இருவரும், ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் தரமறுத்தால், கர்நாடக மதுபானங்கள் மற்றும் கஞ்சா பொட்டலத்தை வைத்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் இருவரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓசூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், முருகானந்தம், மாரியப்பா ஆகிய 2 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மரி யாளம்அடுத்துள்ள பனை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பசம்மா (வயது 42). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்காமல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டார். வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த கணவர் பசம்மா வை மீட்டு உறவினர்கள் உதவியுடன் அஞ்செட்டி மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பசம்மா இறந்தார்.
இதுகுறித்து கணவர் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் . இன்ஸ்பெக்டர் குமரன் விசாரணை நடத்தி வருகிறார்.
கஞ்சா வழக்கு போடுவதாக கூறி 25 வயது இளம்பெண்ணை கற்பழித்ததாக 2 போலீசார் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - உத்தனபள்ளி சாலையில் பெல்லட்டி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஓட்டலில், சூளகிரி போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் முருகானந்தம், மாரியப்பா என்ற போலீசார், உணவு வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், அவர்கள் இருவரும், ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் தரமறுத்தால், கர்நாடக மதுபானங்கள் மற்றும் கஞ்சா பொட்டலத்தை வைத்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் இருவரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்பபடுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓசூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், முருகானந்தம், மாரியப்பா ஆகிய 2 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.
இளம்பெண்ணிடம் கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி 2 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாலும், கே.ஆர்.பி, அணைக்கு கடந்த, 8ந் தேதி 484 கன அடியாக நீர்வரத்து இருந்தது.
கடந்த 3 நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 531 கன அடியாக மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் மொத்தம் உள்ள, 52 அடியில் நேற்று, 46.45 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து, 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் நடந்தது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
ராயக்கோட்டை சிறப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் நிலைய பணியாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது மற்றும் தீவிபத்தில் காயம் ஏற்பட்டால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
மேலும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.
வேப்பனப்பள்ளியில் நிதி நிறுவனம் நடத்தி 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). பால் வியாபாரி. வி.மாதேப்பள்ளி பெரிய சூலாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (46), இவரது மனைவி முனிரத்தினம் (40). இவர்கள் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் ரூ.14 லட்சம் டெபாசிட் செய்தார். இதையடுத்து கடந்த மாதம் அந்த பணததை செல்வராஜ் கேட்டார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியும், முனிரத்தினமும் பணம் கொடுக்க மறுத்து செல்வராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக செல்வராஜ் வேப்பனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இதே போல நிதி நிறுவனம் மூலம் 38 பேரிடம் ரூ.2 கோடியே 69 லட்சத்தை கிருஷ்ணமூர்த்தி, முனிரத்தினம் திருப்பி கொடுக்கால் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் கிருஷ்ணமூர்த்தி,அவரது மனைவி முனிரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயிலாடும்பாறையில் ஆய்வை தொடர்ந்து கொண்டு சென்றால், பழங்கற்காலம் முதல், தற்போதுவரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என அகழாய்வு இயக்குனர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம், தொகரப்பள்ளி, மயிலாடும்பாறையில் கடந்த ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினர் முதற்கட்ட அகழாய்வைத் தொடங்கினார்கள். அதில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு வாள், சிவப்புநிற மூன்று கால் ஜாடி போன்ற முக்கிய பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டில் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:-
மயிலாடும்பாறை சானரப்பன் மலைப் பகுதியில் உள்ள வாழ்விடப் பகுதியில் கிடைத்த கரிமப் பொருள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4,200 ஆண்டுகள் முதல் 700 ஆண்டுகள் வரை கல்வெட்டுகள் கிடைப்பதால், தொடர்ந்து இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. அதற்கான வாழ்விடப் பகுதிகளும், ஈமச்சின்ன பகுதிகளும் கிடைத்துள்ளன. இங்கு இரும்பு தயாரித்ததற்கான உலைகள் இருந்துள்ளன. அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2-ம் கட்ட அகழாய்வில் ஆய்வு செய்ய உள்ளோம். தமிழகத்தில் இதுவரை இது போன்ற அகழாய்வு மேற்கொள்ளாததால், அதன் முடிவுகள் எங்கும் இல்லை. முதல் முறையாக தமிழகத்தில் இங்குதான் இரும்பு பயன்பாட்டிற்கு அதிக கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை தொடர்ந்து கொண்டு சென்றால், பழங்கற்காலம் முதல், தற்போது வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இங்கு பழங்கால செங்கல்லும் கிடைத்துள்ளதால், தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் கட்டிடங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாணக்கார தெரு ராசு வீதியை சேர்ந்தவர் மன்னன். இவரது மகன் அரிச்சந்திரன் (வயது23). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று ஓசூர் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை போடு பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அரிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஓசூரில்பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கே.சி.சி நகரை சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி கற்பகம் (வயது54). இவர் தனது பேத்தி பூஜா என்பவருடன் ஒசூர் ரெயில்வே நிலையம் அருகே உள்ள கிளினிக் சென்று சிகிச்சை பெற்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் நடந்து வந்த நபர் கற்பகம் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு பவுன் தங்க செயினை பிடுங்கி சென்று விட்டனர்.
இது குறித்து அவர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
ஒசூர்,
பெங்களூரை சேர்ந்தவர் அப்துல் அமித் (வயது45). இவர் தனது குழந்தைகளுடன் நேற்று ஓசூர் அருகேயுள்ள மோரனப்பள்ளி ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியின் கரையின் ஓரம் பைக்கை நிறுத்தி விட்டு ஏரி தண்ணீர் தெரியுமாறு செல்பி போட்டோ எடுத்துள்ளார்.
பின்னர் தண்ணீரின் ஆழம் தெரியாமல் ஏரிக்குள் நடந்து சென்ற போது அப்துல் அமித் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இது குறித்து அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில்கார் மோதி விவசாயி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் பணகமுட்லு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது55). விவசாயி இவர் நேற்று கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் மேச்சேரி நகர் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






