என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரியில் கார் மோதி விவசாயி பலி

    கிருஷ்ணகிரியில்கார் மோதி விவசாயி பலியானார்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் பணகமுட்லு பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது55). விவசாயி இவர் நேற்று கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் மேச்சேரி நகர் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×