என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி அருகே கார் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாணக்கார தெரு ராசு வீதியை சேர்ந்தவர் மன்னன். இவரது மகன் அரிச்சந்திரன் (வயது23). இவர் கிருஷ்ணகிரி அருகே போலுப்பள்ளியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று ஓசூர் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை போடு பள்ளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அரிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






