search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி வாலிபர் பலி"

    • வேகாகொல்லை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.
    • முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே வேகாகொல்லை அய்யனார் கோயில் தெரு மணிகண்டன் (வயது 35) இவர் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு முத்தாண்டி குப்பத்திலிருந்து கொல்லுகாரன்குட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது கீழக்குப்பம் மின்வாரிய அலுவலகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் 108 மூலம் பண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் முத்தாண்டி குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணபிரான் மற்றும் முனிராஜ். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு தேசூரில் இருந்து காரில் வந்தவாசி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை கண்ணபிரான் ஓட்டி சென்றார்.

    வந்தவாசி அடுத்த சத்யா நகர் பகுதி அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதனால் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த கண்ணபிரான் மற்றும் முனிராஜ் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் விபத்துக்குள்ளான காரில் இருந்த முனிராஜ் வெளியே மீட்டனர்.

    கண்ணபிரான் மட்டும் காரில் சிக்கி கொண்டு வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கும், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி காரின் பக்கவாட்டு கதவை உடைத்து சிக்கி கொண்டி ருந்த கண்ணபிரானை மீட்டனர். பின்னர் பலத்த காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் பரிதாபமாக இறந்தார். முனிராஜிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் போலீசார் கண்ண பிரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
    • சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த சேலம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குடிப்பட்டி மேம்பாலம் அருகே நேற்று மாலை நாமக்கல்லில் இருந்து பெங்களூர் நோக்கி ஒரு கார் சென்றது.

    அப்போது அந்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஊத்துப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 24), மோகன் (26) ஆகிய இரண்டு வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான் கோட்டை போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தரு மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரியலூர் அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
    • காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    அரியலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கல்லை கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 36).

    இவர் ஆண்டிமடம் பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து செந்துறை நோக்கி சென்றுள்ளார்.

    அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கிராமத்தில் வந்து கொண்டிருந்தபோது மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த கார் ஒன்று ஜெயங்கொண்டம் நோக்கி வந்தது.

    அப்போது காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ரவிச்சந்திரன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×