என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மாந்தோப்பில் பிணமாக கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே பேலாளம் செல்லும் சாலையில் உள்ள முகமது இஸ்மாயில் என்பவரது மாந்தோப்பில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் தளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    இதுபற்றி தகவலறிந்த இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் மாந்தோப்புக்கு சென்றனர். அவர் இறந்து கிடந்தவர்  நீல கலரில் சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார்.  அருகில் பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்ததும் தெரியவந்தது.

     போலீசார்அங்கிருந்த பொது மக்களிடம் விசாரணை செய்ததில் இவர் யார் என்று தெரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் இறந்தவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.

    இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குளிர்சாதன கிடங்கில் பிணண் வைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் குறித்து  தளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரியவகை நோயால் அவதிப்படும் 9 மாத குழந்தையின் சிகிச்சை செலவுக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
    ஓசூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  டைட்டான் டவுன்ஷிப்  அருகே வசித்து வருபவர் சிவகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இவர், உறவினர் பெண்ணான பூங்கொடி (வயது 21 ) வயது என்பவரை திருமணம் செய்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு ரித்விக் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது. 

    இந்த குழந்தைக்கு 5-வது மாதத்தில் சளி காய்ச்சல், தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெங்களுருரில் உள்ள தனியார் மருத்துமனையில் சுமார் ரூ 12 லட்சம் வரை செலவு செய்தும்  குணமடையவில்லை.

    பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு அலோஜெனிக் பெரிபெரல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும்,   அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 25 லட்சம் வரை செலவாகும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். 

    தங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், தமிழக முதல்வர் உதவி புரிந்து, குழந்தையை காப்பாற்ற வேண்டும்  என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலைஜிங்கங்கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி சிவசங்கரன் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பந்தரஹள்ளி எஸ்.சி. காலணி பகுதிக்கு சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித்தர 2 ஆண்டு கால கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தாசில்தார் இளங்கோவிடம் கேட்டுள்ளார். 

    இதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தால் தாசில்தார் அலுவலகத்தின் உள்ளே தனது 1 1/2 வயது கை குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். 

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிறகு தாசில்தார் இளங்கோ பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சுடுகாட்டிற்கு இடத்தை தேர்வு செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
    ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன். இவரது மகன் ஆகாஷ் (வயது 20). இவர் ஓசூர் ராம்நகர் பகுதியில் தங்கி பழ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஆகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ் (வயது 37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஜெர்மனி நாட்டில் ரூ.85 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை தயாராக இருப்பதாக ஆசை காட்டினார். 

    இதை நம்பிய ராபர்ட் லாரன்ஸ், அவரிடம் தொடர்ந்து பேசினார்.

    அப்போது நுழைவு கட்டணமாக ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் பணம் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து ராபர்ட் லாரன்ஸ், அவரது வங்கி கணக்குக்கு ரூ.5.96 லட்சத்தை கட்டினார். அதன்பின்னர் அந்த நபர் ,  தொடர்பு கொள்ளவில்லை.


    இதனால் ராபர்ட் லாரன்ஸ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் பணம் மோசடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரங்களை வெட்டி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த அரிய வகை மரங்களை மர்ம நபர்கள் கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன், வனவர் விஜய முருகன், வனக் காப்பாளர்கள் ஆறுமுகம் வெற்றிவேல் மற்றும் வன ஊழியர்கள் ஆகியோர் இருது கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     அந்த வழியாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் அந்த டெம்போவில் உயர்வும் விலையுயர்ந்த அரியவகை மரங்களான  ரோஸ்வுட் (ஈட்டி)மரங்கள் இருந்தது தெரியவந்தது சோதனையின்போது வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர் . உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து 2 பேரை பிடித்தனர். 2 நபர் தப்பிச் சென்று விட்டனர்.

    வனத்துறையினர் கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (வயது 43), மசூத்(25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

     தப்பி ஓடியவர்கள் வன்னிய புரம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (32) தேன்கனிக்கோட்டை சிறந்த சுஹேல்(42 ) என்பதும் தெரியவந்தது மேலும் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்திருந்த விலை உயர்ந்த ஈட்டி வகை ரோஸ்வுட் மரங்களை அனுமதியின்றி வெட்டி கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது  தெரியவந்தது .

    அவர்களிமிருந்த 3.5 டன் ரோஸ்வுட் மரங்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மண் கடத்திய வழக்கில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்லாவி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகே கனிமவளத் துறை அலுவலர் பொன்னுமணி நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப் போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி 3 யூனிட் மண்ணை சட்ட விரோதமாக செங்கல் சூளைக்கு கடத்திய வருவது தெரிய வந்தது. 

    மண்ணை கடத்திய போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரியின் உரிமையாளர் கெவரன், அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநரான வெங்கடேசன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கனிமவளத் துறை அலுவலர் பொன்னுமணி அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி சென்ற  டிப்பர் லாரியின் உரிமையாளர் கெவரன்,  டிரைவர் வெங்கடேசன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாயமான பட்டதாரி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மேட்டுபுலியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் இளம்பரிதி (வயது 32). இவர் எம்.எஸ்சி.பி.எட். வரை படித்துள்ள இவருக்கு திருமணமாகவில்லை .

    நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற இளம்பரிதி  அதன்பின்னர் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பரிதியின் தந்தை மூர்த்தி பாருர்  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ஓசூர், 

    தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு,  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கர்நாடக மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகள், ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுது, அவற்றில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அந்த ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் கலந்து வருகிறது.

    தற்போது, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரில், ரசாயன கலவைகள் கலந்திருப்பதால், தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரை பொங்கி மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், காற்றில் அவை பறந்து ஆங்காங்கே, படர்கின்றன. மழைக்காலங்களில் தொடர்ந்து இவ்வாறு இருந்து வருவதால் விவசாயிகளும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு : 44.28  அடி ஆகும். நீர் இருப்பு  40.18 அடி உள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை ) காலை, அணைக்கு வினாடிக்கு 593 கன அடி நீர்  இருந்தது. வினாடிக்கு 480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி  மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டி, சின்னா கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சின்னசேட்டு இவரது மனைவி தீபா (வயது 22 ).

    இந்த தம்பதியினருக்கு திருமணமாக இரண்டாடுகள் ஆனநிலையில் குழந்தைகள் இல்லை, இதனையடுத்து கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. 

    மீண்டும் நேற்று  கடந்த 12- ந் தேதி மாலை கணவனுடன் கோபித்து கொண்டு  வீட்டை விட்டு சென்ற தீபா வீடு திரும்பவில்லை .இது குறித்து தீபாவின் கணவர் சிங்காரப்பேட்டை  போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் . அதன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
    ஓசூரில் பெண்ணின் கைப்பையில் இருந்த பணம் திருடியதனால் ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஓசூர்,

    ஓசூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது32). இவர், ஒரு வக்கீல்  அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று அவர், ஓசூர் - பாகலூர் சாலையில் பஸ்-ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் நைசாக வந்து, உமாமகேஸ்வரியின் கைப்பையில் இருந்த 3,100- ரூபாயை திருடினர். கையும், களவுமாக பிடிபட்ட அவர்கள் மூவரும், ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

    விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே பாபு நகரை சேர்ந்த ஜோதி (30), மற்றொரு ஜோதி (32) மற்றும் சபீனா (25) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தந்தை செல்போன் வாங்கி தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.
    ராயக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள லிங்கணம்பட்டியை சேர்ந்த விவசாயி இவரது மகன் ஹரிஷ் (வயது 17). ராயக்கோட்டை  தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

     இந்நிலையில் அவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் கடந்த 4 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.  நேற்று முன்தினம் காலை  அவரது தந்தை கோவிந்தராஜனிடம் செல்போன் வாங்கித் தருமாறு கூறியதாக தெரிகிறது.

     அப்போது கோவிந்தராஜன் செல் போன் வாங்கித் தர முடியாது  என்று மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த ஹரிஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்துவிட்டான். 

    இதையடுத்து  சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிஷ் நேற்று பரிதாபமாக இறந்தான்.
    இந்த சம்பவம் குறித்து  ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு  செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×