என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட மரங்களையும், கைதான 2 பேரையும் படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட மரங்களையும், கைதான 2 பேரையும் படத்தில் காணலாம்.

    தேன்கனிக்கோட்டை அருகே மரங்கள் வெட்டி கடத்தல்: 2 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே மரங்களை வெட்டி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியில் இருந்து விலை உயர்ந்த அரிய வகை மரங்களை மர்ம நபர்கள் கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி க்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன், வனவர் விஜய முருகன், வனக் காப்பாளர்கள் ஆறுமுகம் வெற்றிவேல் மற்றும் வன ஊழியர்கள் ஆகியோர் இருது கோட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

     அந்த வழியாக வந்த டெம்போவை மடக்கி பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் அந்த டெம்போவில் உயர்வும் விலையுயர்ந்த அரியவகை மரங்களான  ரோஸ்வுட் (ஈட்டி)மரங்கள் இருந்தது தெரியவந்தது சோதனையின்போது வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர் . உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து 2 பேரை பிடித்தனர். 2 நபர் தப்பிச் சென்று விட்டனர்.

    வனத்துறையினர் கைதானவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (வயது 43), மசூத்(25) ஆகிய இருவரை கைது செய்தனர்.

     தப்பி ஓடியவர்கள் வன்னிய புரம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் (32) தேன்கனிக்கோட்டை சிறந்த சுஹேல்(42 ) என்பதும் தெரியவந்தது மேலும் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களில் வளர்ந்திருந்த விலை உயர்ந்த ஈட்டி வகை ரோஸ்வுட் மரங்களை அனுமதியின்றி வெட்டி கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது  தெரியவந்தது .

    அவர்களிமிருந்த 3.5 டன் ரோஸ்வுட் மரங்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 
    Next Story
    ×