என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
போச்சம்பள்ளியில் மண் கடத்திய வழக்கில் 2 பேர் மீது வழக்கு பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மண் கடத்திய வழக்கில் 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கல்லாவி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகே கனிமவளத் துறை அலுவலர் பொன்னுமணி நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப் போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி 3 யூனிட் மண்ணை சட்ட விரோதமாக செங்கல் சூளைக்கு கடத்திய வருவது தெரிய வந்தது.
மண்ணை கடத்திய போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூர் பகுதியை சேர்ந்த டிப்பர் லாரியின் உரிமையாளர் கெவரன், அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநரான வெங்கடேசன் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் கனிமவளத் துறை அலுவலர் பொன்னுமணி அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று மண்ணுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி சென்ற டிப்பர் லாரியின் உரிமையாளர் கெவரன், டிரைவர் வெங்கடேசன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






