என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையில் இருந்து வந்த ரசாயன நுரையுடன் வந்த நீரை படத்தில் காணலாம்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரை விவசாயிகள் அதிர்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரை வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர்,
தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநில ஆற்றங்கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுகள், ஆற்றில் நீர் அதிகரிக்கும் பொழுது, அவற்றில் வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், அந்த ரசாயன கழிவுகள், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரில் கலந்து வருகிறது.
தற்போது, கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரில், ரசாயன கலவைகள் கலந்திருப்பதால், தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரை பொங்கி மலைபோல் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், காற்றில் அவை பறந்து ஆங்காங்கே, படர்கின்றன. மழைக்காலங்களில் தொடர்ந்து இவ்வாறு இருந்து வருவதால் விவசாயிகளும், கிராம மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணையின் முழு கொள்ளளவு : 44.28 அடி ஆகும். நீர் இருப்பு 40.18 அடி உள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை ) காலை, அணைக்கு வினாடிக்கு 593 கன அடி நீர் இருந்தது. வினாடிக்கு 480 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
Next Story






