என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்றத் தலைவி லட்சுமி சிவசங்கரன் தர்ணா போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மாலைஜிங்கங்கதிரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவி லட்சுமி சிவசங்கரன் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பந்தரஹள்ளி எஸ்.சி. காலணி பகுதிக்கு சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித்தர 2 ஆண்டு கால கோரிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என தாசில்தார் இளங்கோவிடம் கேட்டுள்ளார்.
இதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தால் தாசில்தார் அலுவலகத்தின் உள்ளே தனது 1 1/2 வயது கை குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு பிறகு தாசில்தார் இளங்கோ பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சுடுகாட்டிற்கு இடத்தை தேர்வு செய்து தருவதாக உறுதியளித்ததையடுத்து தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
Next Story






