என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    அஞ்செட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மரி யாளம்அடுத்துள்ள பனை கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பசம்மா (வயது 42). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

     இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்காமல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்துவிட்டார். வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த கணவர் பசம்மா வை மீட்டு  உறவினர்கள் உதவியுடன் அஞ்செட்டி மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பசம்மா இறந்தார்.  

    இதுகுறித்து கணவர் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் . இன்ஸ்பெக்டர் குமரன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×