என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு

    ஓசூர் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
    ஒசூர், 

    பெங்களூரை சேர்ந்தவர் அப்துல் அமித் (வயது45). இவர் தனது குழந்தைகளுடன் நேற்று ஓசூர் அருகேயுள்ள மோரனப்பள்ளி ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியின் கரையின் ஓரம் பைக்கை நிறுத்தி விட்டு ஏரி தண்ணீர் தெரியுமாறு செல்பி போட்டோ எடுத்துள்ளார். 

    பின்னர் தண்ணீரின் ஆழம் தெரியாமல் ஏரிக்குள் நடந்து சென்ற போது அப்துல் அமித் தண்ணீரில் மூழ்கி இறந்தார். 
    இது குறித்து  அட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×