என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.
    • அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் வேப்பனஹள்ளி வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து மூன்று மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால் அங்கிருந்த மின்கம்பங்கள் அறுந்து சாலையில் விழுந்தது.

    இதனால் சிகரமா கனப்பள்ளி, உண்டி கைநத்தம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் தருமபுரி மாவட்டம், பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், ஏரியூர், பாலக்கோடு, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    இதனால் பென்னாகரம் காவல் நிலையம், சந்தை தோப்பு இந்தியன் வங்கி, பென்னாகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்து விழுந்தது.

    குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையம் முன்புறம் உள்ள புளியமரம் வேருடன் காவல் நிலையத்தின் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் தடை செய்யப்பட்டது.

    அரூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் நேற்று மதியம் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி, எல்லபுடையாம்பட்டி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அத்துடன் பலத்த காற்று வீசியதால் அரூர் தீர்த்தமலை சாலையில் கீழானூரில் மரம் முறிந்து விழுந்தது. மழையால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    • சூளகிரி அருகே தங்கையின் கணவரை கொலை செய்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏனுசோனை அடுத்து பி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் சந்தோஷ் (வயது23). இவர் சூளகிரி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மீனா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு தியாகரசன் பள்ளி-பி.கொத்தப்பள்ளி சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்மந்தமாக மீனாவின் அண்ணன் முருகேஸ் (25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் தங்கையின் கணவர் சந்தோஷ் என்பவரை கொலை செய்தது ஒப்பு கொண்டார்.

    இது பற்றி முருகேஸ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-

    எனது தங்கை மீனா, சூளகிரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் நான் மீனாவை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் எனது தங்கை எங்களுடன் வரமாட்டேன் என்று கூறினார். இதனால் எனக்கு சந்தோஷ் மீது கோபம் இருந்தது.

    இந்த நிலையில் சந்தோசை கொலை செய்ய நண்பர்கள் மூலம் திட்டம் போட்டேன். நேற்று இரவு சரியான நேரத்தில் சந்தோஷ் தனியாக சென்றான். அப்போது அவரை நான் எனது நண்பர்கள் தொரப்பள்ளியை சேர்ந்த குமார் (24) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோசை குத்தி கொலை செய்ேதாம் என்றார்.

    இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கொலை செய்த முருகேஸ், குமார், 18 வயது வாலிபர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

    ராயக்கோட்டை அருகே நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனச்ச ரகத்திற்கு உட்பட்டது ஊடேதுர்க்கம் காப்பு காடு. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழிதவறி நேற்று காலை திம்ஜேப்பள்ளி ஊராட்சி அடக்கம் கிராமத்திற்கு வந்தது.

    அந்த நேரம் அங்கு சுற்றிய நாய்கள் மானை விரட்டி கடித்தது. இதில் காயம்அ டைந்த மானை பொதுமக்கள் மீட்டனர். இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்ஈ ஸ்வரி முத்தன் ராயக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து வனத்துறையினர் அங்கு வந்தனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் வெங்கட சுப்பிரமணியன் மானுக்கு சிகிச்சை அளித்தார். இதைத்தொ டர்ந்து வனத்துறையினர் மானை கொண்டு செல்லும் வழியில் மான் உயிர்இழந்தது. 

    இதையடுத்து அந்த புள்ளிமான் பாவாடரப்பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவ குழுவினர்மா னின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து மான் புதைக்கப்பட்டது.
    கிருஷ்ணகிரியில் அறிஞர் அண்ணா கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடை பெற்றது.
    கல்லூரியின் முதல்வர் தனபால் யோகா தின தலைமையுரையில் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது உடல் நலனில் முக்கியத்துவம் கொடுத்து முன்னேற வேண்டும். 

    ஒவ்வொரு நாளும் யோகா செய்வதன் மூலம் மனதுக்கு அமைதி, ஆரோக்கியமான உடல் நலம், ஒழுக்கம் ,நினைவுத் திறன் அதிகரிப்பு,ரத்த ஓட்டம் சீராகுதல் ,புதிய சிந்தனை திறன் மேம்படுதல் ,நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு யோகா பயிற்ச்சி பயன் அளிக்கிறது. 

    மேலும் தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, மன ஒருமைப்பாட்டை வளர்க்கலாம். அனைத்து வயதினரும் வாழ்வை வளமாக்க யோகப் பயிற்சி செய்யலாம் என்று பேசினார். 
    யோகா பயிற்சிகளை கல்லூரியின் உடற்கல்வி பேராசிரியர்களான விஜய் ஆனந்த் மற்றும் பிரேமா மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். 

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள்மு னைவர் ஜெகன், ஸ்டீபன் விக்டர் ஆண்டனி, ராமமூர்த்தி ஏற்பாடு செய்தனர். யோகா பயிற்சி தினவிழாவில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
    ஓசூரில் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    ஓசூர், 

    ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள உருது நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில்,கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார் கலந்து கொண்டு, பயனா ளிகளுக்கு அடையாள அட்டைகள், கண் கண்ணாடி,  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    தொடர்ந்து, அவரது தலைமையில் கொரோனா ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 

    மேலும் இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கோவிந்தன், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பூபதி, ஓசூர் வட்டார மருத்துவ அலுவலர் விவேக்,  வீரமணி உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், காசிலிங்கம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் டாக்டர் ஸ்ரீலட்சுமி, மோசின் தாஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா மற்றும் பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.
    கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    ஓசூர், 

    கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒசூர்  கெலவரப்பள்ளி   அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை அணைக்கு, வினாடிக்கு 1,033 கன அடி நீர்  வந்தது. வினாடிக்கு, 800 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில்  வெளியேற்றப்பட்டது.

    தொடர்மழை கார ணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக, கெலவரப்பள்ளி  அணை அருகேயுள்ள  தட்டனபள்ளி, பெத்த குள்ளு, முத்தாலி ஆகிய கிராமங்களில், நேற்று வருவாய்த்துறையினர் ஆட்டோவில் மைக், ஆற்றில் குளிக்கவோ, ஆடுமாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக் கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    சிங்காரப்பேட்டை அருகே 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கல்லூரி மாணவனை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரபேட்டை கேத்தநாய்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் ( எ) பிரகாஷ் (வயது19). இவர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார்.

    இவன் கடந்த மாதம் கேத்தநாயக்கம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில்  ஏழாம் வகுப்பு படி்த்து வரும் 12 வயது சிறுவனை  தகாத முறையில் பிரகாஷ் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார். 
    பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர்கள் சிங்காரப்பேட்டை  போலீசில் புகார் அளித்தனர். 

    அதன் பேரில் போலீசார் ரகாசை கைது செய்து  போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
    ஒன்னல்வாடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்றது.
    ஓசூர், 

    ஓசூர் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    ஊராட்சி தலைவர் மாதேஷ் முன்னிலையில், ஊராட்சிக்குட்பட்ட, காரப்பள்ளி பட்டாளம்மன் நகரில் உதிரி பாகங்களுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 50,000- மதிப்பிலும், ஒன்னல்வாடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் ரூ 1 லட்சத்து 50,000- மதிப்பிலும் போர்வெல் அமைக்கப்பட்டது. 

    இந்த பணியின்போது, துணைத்தலைவர் யோகானந்த், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பாலசந்திரபாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    மத்தூர் அருகே டிராக்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    மத்தூர்,

     கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள சந்தம்பட்டியை சேர்ந்த வர்ரகுவரன். விவசாயி. இவரது வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் முத்துராஜ். 
    இவர் தனது உறவினரான காளியப்பன் என்பவருடன் சேர்ந்து ரகுவரனுக்கு சொந்தமான டிராக்டரை திருடி விற்க முயன்றுள்ளார். 

    அதன்படி சம்பவத்தன்று டிராக்டருடன் மாயமான முத்துராஜ் கிருஷ்ணகிரி அருகேயுள்ள மெக்கானிக் பட்டறை ஒன்றில் அந்த டிராக்டரை விற்க விலை பேசியுள்ளார். 
    இந்நிலையில் டிராக்டர் மாயமானது குறித்து மத்தூர் ரகுவரன்புகார் செய்தார். 

    அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது டிராக்டரை தனது உறவினருடன் முத்து ராஜ் கடத்தி சென்ற சி.சி.டி.வி. காட்சி கிடைத்தது. 
    அதன்பேரில் முத்து ராஜையும், காளியப்பனை யும் கைது செய்த போலீசார் டிராக்டரை மீட்டனர்.
    ×