என் மலர்

  நீங்கள் தேடியது "Shoolagiri youth murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சூளகிரி அருகே தங்கையின் கணவரை கொலை செய்த வாலிபர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சூளகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏனுசோனை அடுத்து பி.கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். இவரது மகன் சந்தோஷ் (வயது23). இவர் சூளகிரி அருகேயுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மீனா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

  இந்த நிலையில் நேற்று இரவு தியாகரசன் பள்ளி-பி.கொத்தப்பள்ளி சாலையில் சந்தோஷ் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் வழி மறித்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதனை பார்த்த அந்த பகுதியில் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

  கொலை செய்யப்பட்ட சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இந்த கொலை சம்மந்தமாக மீனாவின் அண்ணன் முருகேஸ் (25) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

  அப்போது அவர் தங்கையின் கணவர் சந்தோஷ் என்பவரை கொலை செய்தது ஒப்பு கொண்டார்.

  இது பற்றி முருகேஸ் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியதாவது:-

  எனது தங்கை மீனா, சூளகிரி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்துள்ளார். இதனால் நான் மீனாவை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

  இது தொடர்பாக நான் போலீசில் புகார் கொடுத்தேன். அப்போது அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் எனது தங்கை எங்களுடன் வரமாட்டேன் என்று கூறினார். இதனால் எனக்கு சந்தோஷ் மீது கோபம் இருந்தது.

  இந்த நிலையில் சந்தோசை கொலை செய்ய நண்பர்கள் மூலம் திட்டம் போட்டேன். நேற்று இரவு சரியான நேரத்தில் சந்தோஷ் தனியாக சென்றான். அப்போது அவரை நான் எனது நண்பர்கள் தொரப்பள்ளியை சேர்ந்த குமார் (24) மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சந்தோசை குத்தி கொலை செய்ேதாம் என்றார்.

  இது தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை கொலை செய்த முருகேஸ், குமார், 18 வயது வாலிபர் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

  ×