என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆற்றோர கிராமங்களுக்கு மைக்மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போது எடுத்தபடம்.
கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
கெலவரப்பள்ளி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
ஓசூர்,
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஓசூர் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை அணைக்கு, வினாடிக்கு 1,033 கன அடி நீர் வந்தது. வினாடிக்கு, 800 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
தொடர்மழை கார ணமாக, கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக, கெலவரப்பள்ளி அணை அருகேயுள்ள தட்டனபள்ளி, பெத்த குள்ளு, முத்தாலி ஆகிய கிராமங்களில், நேற்று வருவாய்த்துறையினர் ஆட்டோவில் மைக், ஆற்றில் குளிக்கவோ, ஆடுமாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக் கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story






