என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டரை திருடிய முத்துராஜ், காளியப்பன் ஆகிய இருவரையும் படத்தில் காணலாம்.
மத்தூர் அருகே டிராக்டரை திருடிய 2 பேர் கைது
மத்தூர் அருகே டிராக்டரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள சந்தம்பட்டியை சேர்ந்த வர்ரகுவரன். விவசாயி. இவரது வீட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் முத்துராஜ்.
இவர் தனது உறவினரான காளியப்பன் என்பவருடன் சேர்ந்து ரகுவரனுக்கு சொந்தமான டிராக்டரை திருடி விற்க முயன்றுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று டிராக்டருடன் மாயமான முத்துராஜ் கிருஷ்ணகிரி அருகேயுள்ள மெக்கானிக் பட்டறை ஒன்றில் அந்த டிராக்டரை விற்க விலை பேசியுள்ளார்.
இந்நிலையில் டிராக்டர் மாயமானது குறித்து மத்தூர் ரகுவரன்புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெ க்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது டிராக்டரை தனது உறவினருடன் முத்து ராஜ் கடத்தி சென்ற சி.சி.டி.வி. காட்சி கிடைத்தது.
அதன்பேரில் முத்து ராஜையும், காளியப்பனை யும் கைது செய்த போலீசார் டிராக்டரை மீட்டனர்.
Next Story






