என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போர்வெல் அமைக்கும் பணி நடந்த காட்சி.
    X
    போர்வெல் அமைக்கும் பணி நடந்த காட்சி.

    ஒன்னல்வாடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கும் பணி

    ஒன்னல்வாடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்றது.
    ஓசூர், 

    ஓசூர் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சி பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    ஊராட்சி தலைவர் மாதேஷ் முன்னிலையில், ஊராட்சிக்குட்பட்ட, காரப்பள்ளி பட்டாளம்மன் நகரில் உதிரி பாகங்களுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 50,000- மதிப்பிலும், ஒன்னல்வாடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் ரூ 1 லட்சத்து 50,000- மதிப்பிலும் போர்வெல் அமைக்கப்பட்டது. 

    இந்த பணியின்போது, துணைத்தலைவர் யோகானந்த், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்,வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பாலசந்திரபாபு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×