என் மலர்
கிருஷ்ணகிரி
- தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர்ஜெகதீசன் துவக்கி வைத்தார்.
- பாதுகாப்பாக பொருட்களை கையாளுவது எப்படி என்று விளக்கப்பட்டது.
ஓசூர்,
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் தமிழ்நாடு பிரிவு இணைந்து கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு "விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பது" குறித்து ஒரு நாள் பாதுகாப்பு கருத்தரங்கம் ஒசூரில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிணை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் இயக்குநர்ஜெகதீசன் துவக்கி வைத்து துவக்க உரையாற்றினார்.
இக்கருத்தரங்கில் மின்சார பாதுகாப்பு, பாது காப்பாக பொருட்களை கையாளுதல், தீ தடுப்பு மற்றும் நடத்தை அடிப்படை யிலான பாதுகாப்பு குறித்து நிபுணர்கள் மூலம் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இக்கருத்தரங்கில் கூடுதல் இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகா தாரம்பூங்கொடி, சபீனா, இணை இயக்குநர், தொழலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், ஒசூர், ராஜகோபாலன் துணை தலைவர், டைட்டன் கம்பெனி, கைலாசநாதன், செல்லமுத்து, மனிதவள மேலாளர். அசேரக் லைலேண்ட் லிமிடெட் கவிதாசன், இயக்குநர், ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கோவை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பைதுல்லா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
- கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சரகம் பழையகோட்டை காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் பைதுல்லா (வயது 29). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. போதையில் வீட்டுக்கு சென்ற பைதுல்லா மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்தார். இதனால் நேற்று பைதுல்லா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்ப வில்லை.
- ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீஸ் சரகம் ராம்நகரை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி ராபிமா.
இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் அதன் பிறகு திரும்ப வில்லை.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் ராஜசேகர் எனது மனைவியை வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஹரிபாபு என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- போலீசார் ஓசூர் ரிங்ரோடு கொத்தூர் ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- காரில் ரூ.3, 30,432- மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், 467.3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசாருக்கு குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ஓசூர் ரிங்ரோடு கொத்தூர் ஜங்ஷனில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3, 30,432- மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், 467.3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ரூ.2,683 மதிப்பிலான 48 மதுபாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. இவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரித்ததில், இவற்றை விற்பனைக்காக பெங்களூரிலிருந்து கோவைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கார் டிரைவர் மாலாராம் (வயது28) மற்றும் தினேஷ் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
- ஆறுமுகம் நாகரசம்பட்டி போலீசில் எனது மகளை பாரூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி அடுத்துள்ள பேருஅள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சவுமியா (வயது21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் போச்சம்பள்ளி நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆறுமுகம் நாகரசம்பட்டி போலீசில் எனது மகளை பாரூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
- மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
- 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில், ஓசூரில் நேற்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
ஓசூர் ஜுஜுவாடி, பேகேபள்ளி, எழில் நகர் பாலாஜி நகர், சின்ன எலசகிரி,ஆர்.ஆர்.நகர், அண்ணாமலைநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த கொடியேற்று விழாவிற்கு, மேற்கு மாவட்ட செயலாளர் அருண் ராஜன் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் இதில், பா.ம.க. வக்கீல்கள் சமூகநீதி பேரவையின் தகவல்தொடர்பு மாநில தலைவர் கனல் கதிரவன், வெங்கடேஷ், கஜேந்திரன்,விசுவநாதன், குணசேகரன், சக்திவேல், தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- எதிரே வந்த லாரி மோதியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸ் சரகம் பாலக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சரவணன். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற சரவணன் மீது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது.
- தருமபுரியில் 77.20 சதவிகிதம் வாக்குப்பதிவு.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு எண்.12), கொப்பக்கரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.4), தளி ஊராட்சி ஒன்றிய, ஊராடர்சி வார்டு உறுப்பினன் (வார்டு எண்.16) ஆகிய 3 பதவிகளுக்கான உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது.
இதற்காக மொத்தம் 10 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் உள்ள ஆண் வாக்காளர்கள் 3,235 பேரில், 2,399 பேரும், 2,934 பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 47 பேரும் என மொத்தம் 4,446 பேர் வாக்களித்தனர். அதன்படி, ஆண் வாக்காளர்கள் 74.16 சதவீதம், பெண் வாக்காளர்கள் 69.76 சதவீதம் என மொத்தம் 72.07 சதவீதம் வாக்கப்பதிவானது. இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி கெலமங்கலம் மற்றும் தளி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் 19-வது வார்டுக்கும், பாலக்கோடு கிராம பஞ்சாயத்தில் 8-வது வார்டுக்கும், மொரப்பூரில் 4 மற்றும் 7-வது வார்டுக்கும் தேர்தல் நடந்தது.மொத்தமுள்ள,109 வாக்காளர்களில் 6,260 பேர் வாக்களித்தனர். ஆண்கள் 3,233 பேர். பெண்கள் 3,037 பேர். பதிவான வாக்குகள் 12-ம் தேதி எண்ணப்படவுள்ளது.
- நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நக ராட்சியை பிளாஸ்டிக் இல்லா நகராட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக, நகராட்சி மூலம் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என நகரில் வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் அறிவு றுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் தடையை மீறி சிலர் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள கடைகளில் நேற்று நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் தலைமையில் நகராட்சி ஆணையாளர்(பொ) சரவணன், சுகாதார அலு வலர்கள் மோகனசுந்தரம், துப்பரவு ஆய்வாளர்கள் சந்திரகுமார், உதயகுமார், கோவிந்தராஜ், துப்பரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், எஸ்.சரவணன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கார்நே சன் திடலுக்கு செல்லும் சாலையில் குடோன் ஒன்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ஆய்வுக்குழுவினர், குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிக்காராம்(30) என்பவருக்கு எச்சரிக்கை விடுத்தும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க நகர்மன்ற தலைவர் உத்தரவிட்டார்.இது குறித்து நகர்மன்ற தலைவர் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மண், நீர், காற்று மாசுபடுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சி யிலும் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி மஞ்சள்பையை பயன்படுத்த வேண்டும் என்றார்.
- மோட்டார் சைக்கிளில் டியூப்பில் கள்ளச்சாராயம் கடத்தினர்.
- சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் டியூப்பில் கள்ளச்சாராயம் கடத்தியதாக பெரம கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அழித்தனர். தலைமறைவான கனகராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
- இதற்கான ஏற்பாடுகளை களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளி தலையாசிரியர் நெப்போலியன் செய்திருந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள களர் பதி அரசு உயர்நிலைப் பள்ளி யில் போச்சம்பள்ளி 7-ம் அணி காவலர் பயிற்சிப் பள்ளியின் காமாண்டர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செல்வதுரை தலையிலும், உதவி காவல் ஆய்வாளர் சுகவனம் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட 7-ம் அணி பயிற்சிப் பள்ளி காவலர்கள் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள அடர்ந்த முட்புதர்கள், செடி, கொடிகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை களர்பதி அரசு உயர்நிலைப் பள்ளி தலையாசிரியர் நெப்போலியன் செய்திருந்தார்.
- திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
- இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
தேன்கனிக்கோட்டை அருகே பேச்சப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆஞ்செயன் (32). கூலி தொழிலாளி. இவரது தந்தை திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார். இதில் விரக்தியடைந்த ஆஞ்செயன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






