என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 72.07 சதவீதம் வாக்கு பதிவு
- நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது.
- தருமபுரியில் 77.20 சதவிகிதம் வாக்குப்பதிவு.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (வார்டு எண்.12), கொப்பக்கரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.4), தளி ஊராட்சி ஒன்றிய, ஊராடர்சி வார்டு உறுப்பினன் (வார்டு எண்.16) ஆகிய 3 பதவிகளுக்கான உள்ளாட்சி தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 6 மணி வரை நடந்தது.
இதற்காக மொத்தம் 10 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதில் உள்ள ஆண் வாக்காளர்கள் 3,235 பேரில், 2,399 பேரும், 2,934 பெண் வாக்காளர்களில் 2 ஆயிரத்து 47 பேரும் என மொத்தம் 4,446 பேர் வாக்களித்தனர். அதன்படி, ஆண் வாக்காளர்கள் 74.16 சதவீதம், பெண் வாக்காளர்கள் 69.76 சதவீதம் என மொத்தம் 72.07 சதவீதம் வாக்கப்பதிவானது. இவற்றிற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ம் தேதி கெலமங்கலம் மற்றும் தளி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் 19-வது வார்டுக்கும், பாலக்கோடு கிராம பஞ்சாயத்தில் 8-வது வார்டுக்கும், மொரப்பூரில் 4 மற்றும் 7-வது வார்டுக்கும் தேர்தல் நடந்தது.மொத்தமுள்ள,109 வாக்காளர்களில் 6,260 பேர் வாக்களித்தனர். ஆண்கள் 3,233 பேர். பெண்கள் 3,037 பேர். பதிவான வாக்குகள் 12-ம் தேதி எண்ணப்படவுள்ளது.






