என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • இந்தியாவிற்கு பிளாஸ்டிக் மலர்கள் 95 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதியாகி வருகிறது.
    • பொதுமக்கள் பிளாஸ்டிக் மலர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    ஓசூர், 

    பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட மலர் விவசாயிகள், மலர் வியாபாரிகள் சார்பில் நேற்று ஓசூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஓசூர் பஸ் நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தேசிய தோட்டக்கலைத்துறை உறுப்பினர் பாலசிவபி ரசாத் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரோஜா, ஜெர்பரா, சாமந்தி உள்ளிட்ட கொய்மலர்களை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது கூறியதாவது:-

    திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால், மலர் விவசாயிகள் மற்றும் மலர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு பிளாஸ்டிக் மலர்கள் 95 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதியாகி வருகிறது.

    இதனால் இந்திய மலர் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 30,000 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் மலர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டு தடைக்கான விதிமுறைகளை, கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், மலர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஹரீஷ், விக்ரம் ராஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே அங்கு வந்த திருநங்கைகள் சிலரும், பொதுமக்களுக்கு பூக்களை வழங்கி, பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

    • இந்து மக்களின் மத உணர்வுகளை அவமதித்து, அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் செயல்பட்டுள்ளார்.
    • ஆவணப்பட தயாரிப்பாளர், நடிகர்களை கைது செய்து, ஆவணப்படத்தையும் தடை செய்ய வேண்டும்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. ஆலயமேம்பாட்டு பிரிவு சார்பில், மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் தலைமையில், ஓசூர் டவுன் போலீசில் வழங்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தான் தயாரித்துள்ள ஆவணப்படத்தை விளம்பரப்படுத்த, பெரும்பான்மையான இந்துக்கள் வணங்கும் தெய்வம் காளியம்மன் உருவத்தை அருவருக்கத்தக்க வகையில் சித்தரித்து புகைப்படம் உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    அவர், இந்து மக்களின் மத உணர்வுகளை அவமதித்து, அவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் செயல்பட்டுள்ளார்.

    மக்களிடையே பிளவை உண்டாக்கி, சமூக அமைதியை குலைத்து கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட லீனா மணிமேகலை மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர், நடிகர்களை கைது செய்து, ஆவணப்படத்தையும் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கேட்டுக்கொள்ள ப்பட்டுள்ளது. மனு வழங்கும் நிகழ்ச்சியின்போது, ஆலயமேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஓம், மற்றும் மாவட்ட பா.ஜ.க.பொதுச்செ யலாளர்கள்மனோகர், அன்பரசன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 21 வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.
    • காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த மாதம் 22ம் தேதி முதல் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று மாலை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடந்தது.

    இதில், கோல்டன் ரெட் ரைவர், ஜெர்மன் ஷபர்டு, லேப்ராடர், பக்ஸ், சைபீரியன் ஷிஸ்கி, பிரஞ்சு புல்டாக், லசாப்போ,

    டால்மேசன், பாக்ஸர், டெரியர், ராட்வீலர், டாபர்மேன், டேக்ஷன்ட், கிரேட்டேன், ஸ்பிட்ஸ், பொமேரியன், ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, ஸ்பெனியல் மற்றும் நாட்டின நாய்கள் என 200க்கும் அதிகமான 21 வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    இந்த நாய்களின் அடிப்படை குணங்கள், உடல் நலம், பராமரிப்பு, சொல்லுக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பிரிவுகளில், உள்நாட்டு இனம், வெளிநாட்டு இனம், சிறிய ரக நாய் இனம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியின் நடுவராக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர்.நாகராஜன் நடுவராக பங்கேற்று, சிறந்த நாய்களை தேர்வு செய்தார்.

    அதன்படி, ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற நாய்கள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, இந்திய இனத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த நாய் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளரான சக்கோடியை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கும், அயல்நாட்டு இனத்தை சேர்ந்த ஜெர்மன்ஷெபர்டு தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளரான ஓசூர் ஹரிஸ்குமார் என்பவருக்கும், பப்பி இனத்தில் லேபர்டார் பப்பி நாயின் உரிமையாளரான கிருஷ்ணகிரி விக்னேஷ் என்பவருக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயங்களை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சத்தீஸ்குமார் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியின் போது காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள்.மரியசுந்தர், அருள்ராஜ், கலையரசன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

    • வெட்டப்பட்டு பனை மரங்கள் அழிந்து வருவதாக கூறி இத்தடையை தமிழக அரசு விதித்தது.
    • கடந்த சில ஆண்டுகளாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    மத்தூர்,

    தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்ட தடை விதித்தது. நாட்டில் அதிக அளவு பனை மரங்கள் வெட்டப்பட்டு பனை மரங்கள் அழிந்து வருவதாக கூறி இத்தடையை தமிழக அரசு விதித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பனை மரங்கள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து பனை வெட்டும் வியாபாரி பழனி அவர்களிடம் கேட்டபோது பட்டா நிலத்தில் தேவையில்லாத பனை மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.

    அந்த பனை மரங்கள் தேவையில்லை என்கிற காரணத்தாலும் விவசா யத்திற்கு இடையூறாக இருக்கின்ற காரணத்தாலும் அதுபோன்ற மரங்களை வெட்டி வருகிறோம் என தெரிவித்தார்.

    இதுகுறித்து போச்சம் பள்ளி வட்டாட்சியர் கூறிய போது பனை மரங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. வெட்டியவர்கள் மீது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
    • இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 31ம் கட்டமாக 1346 மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரண்டப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் ஆணைப்படி நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,346 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.

    நமது மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 56 ஆயிரத்து 251 ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.

    அதே போல 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தம் 86 ஆயிரத்து 800 ஆகும். இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 78 ஆயிரத்து 792. இரண்டா வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 65 ஆயிரத்து 72 ஆகும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரத்து 300 பேர்.

    இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 13 லட்சத்து 61 ஆயிரத்து 20 நபர்கள் ஆவார்கள்.

    இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 691 நபர்கள் ஆவார்கள். இன்று கோவிஷீல்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 510 தடுப்பூசிகளும், கோவேக்சின் 53 ஆயிரத்து 700 தடுப்பூசிகள், கார்பிவேக்ஸ் தடுப்பூசிகள் 3,120 என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 330 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். வெளியி டங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும். எனவே, இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாது காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது டாக்டர் ராகவேந்திர குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாமணி மற்றும், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் நகர் வலம் வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு திருத்தல தேர்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அன்று முதல் நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரை களும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.

    இந்த தேர்த்திருவிழா வின் கடைசி நாளான நேற்று காலை 8 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது.

    பின்னர் மாலை 7 மணியளவில் வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்க ரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை காவேரிப்பட்டிணம் பங்குத்தந்தை இருதயத்தால் மந்தரிக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது.

    இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த விழாவினை யொட்டி தேவாலயம் வண்ண வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை அருட்பணி.இசையாஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.
    • விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கொட்டகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி பாக்கியம்மாள் (வயது 48).

    இவர் வீட்டில் தனியாக இருந்த போது பின்புற கதவை மர்ம நபர்கள் உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் பாக்கியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது. உடனே முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • பிரியா குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.
    • கிணறு குதித்து தற்கொலை செய்த் கொண்டார்.

     கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் சரகம் சாஸ்திரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரியா (வயது17). பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்த பிரியா குறைவான மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்து காணப்பட்ட பிரியா அதே பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்த் கொண்டார்.

    இது குறித்து பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.
    • கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நீர்வரத்து அதிகரிப்பு தென்பெண்ணை ஆற்று படுகை மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி, கடந்த 6-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 392 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1056 கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரை வினாடிக்கு 1,242 கனஅடி தண்ணீரும் பாசனத்திற்காகவும், ஆற்றிலும் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர்.

    விவசாயிகள் மகிழ்ச்சி தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது.

    இருப்பினும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.
    • பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சிப்காட் செல்லும் சாலையில் அயலம்பட்டி கிராமத்தின் அருகே சுமார் 200 மீட்டர் தூர அளவிற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை அமைக்கப்படாமல் இருந்து வருகிறது.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. அயலம்பட்டி, பாரண்டபள்ளி, சின்னபாரண்டபள்ளி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் மக்கள் விடுபட்ட இடத்தில் புதிய தார் சாலை அமைத்துக்கொடுக்க வேண்டி அனைத்து அதிகாரிகளிடத்தும் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை.

    இந்நிலையில் சின்ன பாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்

    இதையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். 

    • நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.
    • ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின்ப கிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த சிப்காட் பேஸ்-2 பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை, சிப்காட் பேஸ் - 2, பத்தலபள்ளி, குமுதேபள்ளி, வெல்பிட் ரோடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இதேபோல்தளி துணை மின்நிலையத்திற்குட் பட்ட தளி, ஜவளகிரி, கும்மளாபுரம், கக்கதாசம்,.அகலக்கோட்டை, தேவகானபள்ளி, அன்னி யாளம், பின்னமங்கலம், ஆறுப்பள்ளி, சி.ஏ.பள்ளி, மற்றும் சுற்றுப்பகுதிகளில் வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) மற்றும் 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் உயர் மின்திறன் கொண்ட கம்பிகள் மாற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால், இந்த இரு நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இவ்வாறுஅந்தசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜனவரி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
    • ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 13 பேருக்கு பாதிப்பு.

    ஓசூர், 

    ஓசூர் பகுதியில் மட்டும் கடந்த 2 மாதங்களில் மட்டும் 38 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஜூன் மாதத்தில் 25 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் இந்த மாதம் 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாக மருத்துவ துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கெலமங்கலம் பகுதியில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஓசூர் பகுதியில் நோய் பாதிப்பை கண்டறிந்து பரவலை தடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    அனைத்து பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலை கண்டறிந்து தடுக்கும் வகையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    ஓசூர் மாநகராட்சி ஆணையர் தரப்பில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவில்லை.

    புதிய நகர் நல அலுவலர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து நடவடிக்கை எடுத்து கண்காணிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மருத்துவத்துறை உதவி இயக்குனர் வட்டாரத்தில் கூறுகையில் ஜனவரி மாதத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 89 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தற்போது டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரிப்பதாக வரும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×