என் மலர்
நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்"
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
- 1,270 மையங்களில் ஊசி போடப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,270 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், இரண்டாவது தவணை செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, 6 பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், 333 ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் என பல்வேறு இடங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இதில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும் கல்வித்துறை பணி யாளர்களுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிட்ஷீல்டு செலுத்திக் கொண்டவர்கள் 84 நாட்கள் கழித்தும், முதல் தவணை கோவேக்சின் செலுத்திக் கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்தும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
- இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 31ம் கட்டமாக 1346 மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரண்டப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தும் மையங்களை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் ஆணைப்படி நமது மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என மொத்தம் 1,346 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
நமது மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயது முதல் தவணையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 56 ஆயிரத்து 251 ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 35 ஆயிரத்து 976 ஆகும்.
அதே போல 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தம் 86 ஆயிரத்து 800 ஆகும். இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 78 ஆயிரத்து 792. இரண்டா வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 65 ஆயிரத்து 72 ஆகும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மொத்தம் 15 லட்சத்து 2 ஆயிரத்து 300 பேர்.
இவற்றில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 13 லட்சத்து 61 ஆயிரத்து 20 நபர்கள் ஆவார்கள்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 691 நபர்கள் ஆவார்கள். இன்று கோவிஷீல்டு 2 லட்சத்து 24 ஆயிரத்து 510 தடுப்பூசிகளும், கோவேக்சின் 53 ஆயிரத்து 700 தடுப்பூசிகள், கார்பிவேக்ஸ் தடுப்பூசிகள் 3,120 என மொத்தம் 2 லட்சத்து 81 ஆயிரத்து 330 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் மூலம் தீவிர நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும். வெளியி டங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணியவேண்டும். எனவே, இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்கள் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாது காத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது டாக்டர் ராகவேந்திர குமார், வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜாமணி மற்றும், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.






