என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மைதானத்தின் ஒரு பகுதியில், நூலகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
    • விளையாட்டுவீரர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ளது. நகரின் மத்தியில் உள்ள இந்த மைதானத்தில், விளையாட்டுவீரர்கள், நாள்தோறும் கிரிக்கெட் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.

    மேலும் ஏராளமான ஆண்கள் பெண்கள், முதியோர், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து தரப்பினரும் எளிதில் வந்து செல்லும் வகையிலும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் வசதியாக உள்ள இந்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில், நூலகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

    இதனால் பொதுமக்கள், நடைபயிற்சியாளர்கள், விளையாட்டுவீரர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்தனர்.

    இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் , மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று மைதானம் முன்பும், காமராஜ் காலனி சாலையிலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அப்போது, நூலகம் கட்டவும்,, விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திடீரென மைதானத்தில் எதிரில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு வந்து மாவட்ட தலைவர் நாகராஜிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாற்று இடம் கண்டறிந்து, அந்த இடத்தில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார். பின்னர், மைதானத்தில் தோண்ட ப்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும், பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.கவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்தனர்.

    நீண்ட நேர போராட்ட த்திற்கு பிறகு, விளையாட்டு மைதானத்தில் நூலகம் அமைக்கப்படாது என்று மேயர் சத்யா, ஆணையாளர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுதியளித்த தையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

    • இன்று, ஆசியாவிலேயே வளர்ந்துவரும் முக்கிய பகுதியாக ஓசூர், விளங்கி வருகிறது.
    • பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கான கட்டமைப்பு இல்லாத நிலைதான் இருந்து வருகிறது.

    ஓசூர்,

    ஐ.என்.டி.யு.சி தேசிய செயலாளரும், முன்னாள் ஓசூர் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன், நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது: "ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, அதற்கான செயல்பாடுகளை காண முடியவில்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள மேயர் மற்றும் கவுன்சிலர்கள் எந்த பணியையும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

    இன்று, ஆசியாவிலேயே வளர்ந்துவரும் முக்கிய பகுதியாக ஓசூர், விளங்கி வருகிறது. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஏராளமானோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    ஆனால், சுகாதாரம், குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் நிறைவேற்றப்படாமலும், பல்வேறு இடங்களில் மாநகராட்சிக்கான கட்டமைப்பு இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. அந்த அரசும், இந்த அரசும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருவதாகவே நான் கருதுகிறேன்.

    இன்று, தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் வரக்கூடிய பகுதியாக, ஓசூர் விளங்கிவரும் நிலையில், அதில் 10 சதவீத நிதியையாவது ஒதுக்கி, பணிகளை மேற்கொண்ருந்தால், ஓசூர் பொலிவு பெற்றிருக்கும். ஆனால், என்ன காரணத்தினாலோ, ஓசூர் ஒதுக்கப்பட்ட பகுதியாகவே இருந்து வருவது,, மிகவும் வருத்தமளிக்கிறது. ஓசூர் நகரம் சீரமைக்கப்பட வேண்டும் எனில், மாநகராட்சி நிர்வாகம் நல்லமுறையில் இயங்கவும், வளர்ச்சிப்பணிகள் நிறைவேற்றவும், ஒரு திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை, நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    அப்போது, ஐ.என்.டி.யு.சி மாவட்ட செயலாளர் முனிராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதற்கு மாநில பொருளாளர் பொன்னையன் தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக கிராம ஊராட்சி தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாநில பொருளாளர் பொன்னையன் தலைமை தாங்கினார்.

    தர்மபுரி மாவட்ட செய்தி தொடர்பாளர் மணி வரவேறற்றார். மாநிலத் தலைவர் கிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் பாண்டியன், மகளிர் அணி மாநிலத் தலைவர் மகேஸ்வரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த போராட்டத்தில் டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகிறது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர்களுக்கு வழங்கப்படும் 3600 மாத ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் மூன்று ஆண்டுகள் பணி செய்த பின் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. ஆகவே பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவித்திருந்த ஓய்வூதியம் இதுவரை வழங்காமல் நிலுவையில் உள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தூய்மைப்பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில், ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்

    வேப்பனபள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் தங்களுடைய ஊரக வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களுடன் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசமூர்த்தி மாற்று திறனாளிகளிடன் பேச்சுவார்த்தை நடத்தி னார். நீண்ட நேர பேச்சுவார்த்தையில் மாற்று திறனாளிகளின் கோரிக்கையை நிறை வேற்றியதை அடுத்து போராட்டத்தை கைவி டப்பட்டனர்.

    இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்துநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.
    • 250-க்கும் மேற்பட்டோர் சுற்றுவட்டார 30 கிராமங்களில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் தமிழ்நாடு அரசின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் ரகுநாத், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், சுகாதார ஆய்வாளர் உமா சங்கர் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களின் கண், காது, மூக்கு, தலை, வயிறு மற்றும் இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான அனைத்துநோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவரும் 250-க்கும் மேற்பட்டோர் சுற்றுவட்டார 30 கிராமங்களில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • வழக்கு கோப்புகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
    • கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நீதி மன்றத்தில் வழக்கு விவ ரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் இ-சேவை மையத்தை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.

    சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கின் விவரங்களையும் வழக்கு கோப்புகளையும் இணையதள வழியில் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு நடத்துபவர்கள் நீதிமன்றத்திற்கு நேரடியாக வராமல் வழக்கு தாக்கல் செய்யும் வசதி இணையமுகவரி மூலமாக ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

    இந்த சேவையை, தற்போது வழக்கறிஞர்களும், வழக்கு நடத்துபவர்களும் நீதிமன்ற வளாகத்திலேயே பயன்படுத்தி கொள்ளும் வகையில் இ-சேவை மையம் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.

    இதை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தொடங்கி வைத்தார்.

    இதில், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்துபவர்கள் தங்கள் பெயர், விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து அவர்களது வழக்கின் விவரங்களையும் வழக்கு கோப்புகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, தலைமை நீதித்துறை நடுவர் ராஜசிம்மவர்மன், மோட்டார் வாகன பிரிவு சிறப்பு சார்பு நீதிபதி இந்துலதா, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி இருதயமேரி, மாஜிஸ்திரேட்டுகள் கார்த்திக் ஆசாத், ஸ்ரீவஸ்தவா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ப்ரீத்தி பிரசன்னா, வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்த ராஜூலு,செயலாளர் ராஜாவிஸ்வநாத், மூத்த வழக்கறிஞர்கள், வக்கீல்கள், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வழக்கறிஞர் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, அவருடைய வழக்கு கோப்பை முதல் வழக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முதன்மை மாவட்ட நீதிபதி சக்திவேல் பெற்றுக் கொண்டு சேவையை தொடங்கி வைத்தார்.

    • அபிஷேக நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
    • குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெற ஆயுஷ் ஹோமங்களும் நடத்தப்பட்டது.

    ஓசூர், 

    ஓசூர் பாரதிதாசன் நகரில் ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், சிறு குழந்தைகள் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில்

    13-வது ஆண்டாக

    சிறு குழந்தைகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 6 மாத கைக்குழந்தை முதல் ஏழு வயது சிறுமிகள் வரை அம்மனுக்கு பால், தயிர், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம், ஆகிய பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்தனர்.அபிஷேக நிகழ்ச்சியில் ஓசூர் பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, குழந்தைகள் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள் பெற ஆயுஷ் ஹோமங்களும் நடத்தப்பட்டது. குழந்தைகள் கல்வியிலும், கலை வளர்ச்சியிலும் சிறந்து விளங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    கேரளாவில் பிரச ன்னம் பார்க்கப்பட்டு இந்தியாவிலே முதல் முறையாக இந்த கோயிலில் குழந்தைகள் மூலம் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.

    • நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார்.
    • ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த போச்சம்பள்ளி போலீஸ் சரகம் கவுண்டப்பலூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த வர முருகம்மாள் (வயது 60).

    இவர் திருப்பத்தூர் சாலையில் நடந்து சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • பொது வழி பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
    • ஸ்ரீனிவாசப்பிரசாத்தை கட்டையாலும் , கல்லாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசப்பிரசாத்( வயது 24).

    விவசாயியான இவருக்கும் உறவினர்களான லோகேஷ், சந்தோஷ்குமார், மஞ்சுளா, சந்திரகலா ஆகியோருக்கும் பொது வழி பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    இதன் எதிரொலியாக லோகேஷ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசப்பிரசாத்தை கட்டையாலும் , கல்லாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

    இது குறித்து ஸ்ரீனிவாசபிரசாத் தந்த புகாரின் பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

    • ஆட்டுக்கொட்டகைக்குள் ஒரு நபர் புகுந்து 5 ஆடுகளை திருடிச் சென்று விட்டார்.
    • அமர்(27) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் பழைய வசந்த் நகரை சேர்ந்தவர் ராஜா (31), மீன் வியாபாரி. மேலும், இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில், ஓசூர் பஸ்தி முனிதேவி நகர் பகுதியில் இவரது சொந்த நிலத்தில் உள்ள ஆட்டுக்கொட்டகைக்குள் ஒரு நபர் புகுந்து 5 ஆடுகளை திருடிச் சென்று விட்டார்.

    இதுகுறித்து, ராஜா ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த அமர்(27) என்ற வாலிபரை கைது செய்தனர். இவர், மெக்கானிக் ஆவார்.

    • பொது குடிநீர் குழாயை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் அமைத்துக் கொடுத்தார்.
    • இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் பேரூராட்சி நான்காவது வார்டில் பொது குடிநீர் பைப் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். உடனடியாக அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படும் வகையில் பொது குடிநீர் குழாயை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார்அமைத்துக் கொடுத்தார். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நான்காவது வார்டு உறுப்பினர் பரமேஸ்வரி சிவன், மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன், நித்தியா முத்துக்குமார், தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கோகுல்ராஜ், கிளை செயலாளர் ரமேஷ், ஸ்ரீதர், சங்கர், கணேசன், இளங்கோ, மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.

    • எச்.ஐ.வி., பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோ தனை மேற்கொள்ளப்படும்.
    • எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 என்ற திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நட மாடும் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருந்திய வாகனத்தை வழங்கியுள்ளது.

    இந்த வாகனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நகர்ப்புற குடிசைப்பகுதிகள், காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், எச்.ஐ.வி., பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோ தனை மேற்கொள்ளும்.

    இந்த நவீன வாகனத்தின் மூலமாக ஒருமணி நேரத்தில், 10 பேருக்கு எக்ஸ்ரே எடுக்க முடியும்.

    எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம். தொடர்ச்சியான இருமல், சளி உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் தடுப்பு சக்தி குறைந்தவர்கள், அதிக இட நெருக்கடியில் வசிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள் மற்றும் எளிதில் காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும்போது பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியி நலப்பணி கள் இணை இயக்குனர் டாக்டர்.பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன், காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர்.சுகந்தா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×