என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிப்பாதை தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
- பொது வழி பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
- ஸ்ரீனிவாசப்பிரசாத்தை கட்டையாலும் , கல்லாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பந்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசப்பிரசாத்( வயது 24).
விவசாயியான இவருக்கும் உறவினர்களான லோகேஷ், சந்தோஷ்குமார், மஞ்சுளா, சந்திரகலா ஆகியோருக்கும் பொது வழி பாதை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் எதிரொலியாக லோகேஷ் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ஸ்ரீனிவாசப்பிரசாத்தை கட்டையாலும் , கல்லாலும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீனிவாசபிரசாத் தந்த புகாரின் பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
Next Story






