என் மலர்
நீங்கள் தேடியது "புதிய குடிநீர் குழாய் திறப்பு"
- பொது குடிநீர் குழாயை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் அமைத்துக் கொடுத்தார்.
- இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் பேரூராட்சி நான்காவது வார்டில் பொது குடிநீர் பைப் இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் காவேரிப்பட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமாரிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். உடனடியாக அப்பகுதியில் பொதுமக்கள் பயன்படும் வகையில் பொது குடிநீர் குழாயை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார்அமைத்துக் கொடுத்தார். இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், நான்காவது வார்டு உறுப்பினர் பரமேஸ்வரி சிவன், மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் கீதா ஞானசேகரன், நித்தியா முத்துக்குமார், தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கோகுல்ராஜ், கிளை செயலாளர் ரமேஷ், ஸ்ரீதர், சங்கர், கணேசன், இளங்கோ, மற்றும் அப்பகுதி மக்கள் உடன் இருந்தனர்.






