என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மைதானம் முன்பு பா.ஜ.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.
ஓசூர் அரசு பள்ளி மைதானத்தில் நூலகம் அமைக்க பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
- மைதானத்தின் ஒரு பகுதியில், நூலகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
- விளையாட்டுவீரர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்தனர்.
ஓசூர்,
ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம், ஓசூர் காமராஜ் காலனியில் உள்ளது. நகரின் மத்தியில் உள்ள இந்த மைதானத்தில், விளையாட்டுவீரர்கள், நாள்தோறும் கிரிக்கெட் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள்.
மேலும் ஏராளமான ஆண்கள் பெண்கள், முதியோர், நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து தரப்பினரும் எளிதில் வந்து செல்லும் வகையிலும், பயிற்சிகள் மேற்கொள்ளவும் வசதியாக உள்ள இந்த விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியில், நூலகம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.
இதனால் பொதுமக்கள், நடைபயிற்சியாளர்கள், விளையாட்டுவீரர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தியும், வேதனையும் அடைந்தனர்.
இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தில் நூலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் , மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று மைதானம் முன்பும், காமராஜ் காலனி சாலையிலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, நூலகம் கட்டவும்,, விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை சூட்டவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து, திடீரென மைதானத்தில் எதிரில், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு வந்து மாவட்ட தலைவர் நாகராஜிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாற்று இடம் கண்டறிந்து, அந்த இடத்தில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் தெரிவித்தார். பின்னர், மைதானத்தில் தோண்ட ப்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும், பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.கவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தவாறு இருந்தனர்.
நீண்ட நேர போராட்ட த்திற்கு பிறகு, விளையாட்டு மைதானத்தில் நூலகம் அமைக்கப்படாது என்று மேயர் சத்யா, ஆணையாளர். பாலசுப்பிரமணியன் ஆகியோர் உறுதியளித்த தையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.






