என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி"

    • எச்.ஐ.வி., பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோ தனை மேற்கொள்ளப்படும்.
    • எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 என்ற திட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நட மாடும் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருந்திய வாகனத்தை வழங்கியுள்ளது.

    இந்த வாகனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நகர்ப்புற குடிசைப்பகுதிகள், காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகள், எச்.ஐ.வி., பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்களுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோ தனை மேற்கொள்ளும்.

    இந்த நவீன வாகனத்தின் மூலமாக ஒருமணி நேரத்தில், 10 பேருக்கு எக்ஸ்ரே எடுக்க முடியும்.

    எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம். தொடர்ச்சியான இருமல், சளி உடையவர்கள், சர்க்கரை நோயாளிகள், நோய் தடுப்பு சக்தி குறைந்தவர்கள், அதிக இட நெருக்கடியில் வசிப்பவர்கள், புகை பிடிப்பவர்கள் மற்றும் எளிதில் காசநோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் பகுதிகளுக்கு இந்த வாகனம் வரும்போது பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியி நலப்பணி கள் இணை இயக்குனர் டாக்டர்.பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.கோவிந்தன், காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர்.சுகந்தா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×