என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே   வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
    X

    கிருஷ்ணகிரி அருகே வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

    • பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.
    • விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள கொட்டகிரி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி பாக்கியம்மாள் (வயது 48).

    இவர் வீட்டில் தனியாக இருந்த போது பின்புற கதவை மர்ம நபர்கள் உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகையை திருடி சென்று விட்டார்.

    இது குறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் பாக்கியம்மாள் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமார் (22) என்ற வாலிபர்தான் பாக்கியம்மாள் வீட்டில் திருடினார் என்பது தெரியவந்தது. உடனே முத்துக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×