என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டினை தடை செய்ய கோரி பொதுமக்களுக்கு பூக்களை வழங்கி விழிப்புணர்வு
- இந்தியாவிற்கு பிளாஸ்டிக் மலர்கள் 95 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதியாகி வருகிறது.
- பொதுமக்கள் பிளாஸ்டிக் மலர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஓசூர்,
பிளாஸ்டிக் மலர்கள் பயன்பாட்டினை முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட மலர் விவசாயிகள், மலர் வியாபாரிகள் சார்பில் நேற்று ஓசூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஓசூர் பஸ் நிலையத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தேசிய தோட்டக்கலைத்துறை உறுப்பினர் பாலசிவபி ரசாத் தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு ரோஜா, ஜெர்பரா, சாமந்தி உள்ளிட்ட கொய்மலர்களை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டிளித்தபோது கூறியதாவது:-
திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு விழாக்களுக்கு பிளாஸ்டிக் மலர்கள் பயன்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால், மலர் விவசாயிகள் மற்றும் மலர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிற்கு பிளாஸ்டிக் மலர்கள் 95 சதவீதம், சீனாவிலிருந்து இறக்குமதியாகி வருகிறது.
இதனால் இந்திய மலர் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 30,000 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் பிளாஸ்டிக் மலர் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள், பிளாஸ்டிக் பயன்பாட்டு தடைக்கான விதிமுறைகளை, கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மலர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஹரீஷ், விக்ரம் ராஜு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே அங்கு வந்த திருநங்கைகள் சிலரும், பொதுமக்களுக்கு பூக்களை வழங்கி, பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.






