என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்   தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்   49-ம் ஆண்டு தேர்த்திருவிழா
    X

    கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தின், திருத்தல தேர்திருவிழா நடந்த போது எடுத்த படம்.

    கிருஷ்ணகிரியில் தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு தேர்த்திருவிழா

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் நகர் வலம் வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 49-ம் ஆண்டு திருத்தல தேர்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    அன்று முதல் நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரை களும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது.

    இந்த தேர்த்திருவிழா வின் கடைசி நாளான நேற்று காலை 8 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட முதன்மைக்குரு அருள்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது.

    பின்னர் மாலை 7 மணியளவில் வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்க ரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேரை காவேரிப்பட்டிணம் பங்குத்தந்தை இருதயத்தால் மந்தரிக்கப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது.

    இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இந்த விழாவினை யொட்டி தேவாலயம் வண்ண வண்ண விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டி ருந்தது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்கு தந்தை அருட்பணி.இசையாஸ் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×